பாம்பாட்டம் இயக்குனர் வடிவுடையான் இயக்கத்தில் ஜீவன்,யாஷிகா ஆனந்த், மல்லிகா ஸ்ர்வேட் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.
பாம்பாட்டம் கதை:
ஒரு பெரிய சமாஸ்தானத்தையே ஆட்சி செய்து வரும் மல்லிகா ஷெராவத், பாம்பு கடித்து மல்லிகா ஷெராவத் இறப்பார் என ஜோஷியர் சொல்ல ஊரில் உள்ள பாம்புகளை கொல்ல உத்தரவிடுகிறார். ஒவ்வொரு பாம்பும் கொல்லப் படுகிறது. ஒரே ஒரு பாம்பு மட்டும் தப்பித்து வந்து மல்லிகா ஷெராவத்தை கொன்று விடுகிறது. அதன் பின்னர் பேயாக மாறி அந்த அரண்மனையில் சுற்றி வரும் அவரால் நிகழும் பிரச்சனைகளை கண்டறிய போலீஸ் அதிகாரியாக வரும் ஜீவன் என்ன செய்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.