பன்னிகுட்டி இயக்குனர் அனுசரண் முருகையன் இயக்கத்தில் நடிகர் கருணாகரன், யோகிபாபு நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கவுள்ளார்.
மேலும் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பிரஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 28-ம் தேதி படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.