பரோல் இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில் லிங்கா, கல்பிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் மதுசூதனன் தயாரிக்க, இசையமைப்பாளர் ராஜ்குமார் அமல் இசையமைத்துள்ளார்.
பரோல் திரைப்படத்தின் கதை
அம்மா இறந்து விட அம்மாவுக்கு ரொம்ப பிடித்த சிறையில் இருக்கும் அண்ணன் லிங்காவை எப்படியாவது பரோலில் வெளியே எடுக்க போராடும் தம்பி ஆர்.எஸ். கார்த்திக்கின் முயற்சியும் இருவருக்குள்ளும் இருக்கும் மோதல்கள் தான் இந்த பாரோல் படத்தின் கதை.