X
பத்து தல
Action | Drama | Thriller | 30 Mar 2023 | U/A | 152 Mins
Tamil

பத்து தல கதை

பத்து தல இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் என பல தமிழ் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா தனது 'ஸ்டூடியோ கிரீன்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

முஃப்டி என்னும் கன்னட திரைப்படத்தின் ரீமேக் படமாக உருவாகியுள்ள 'பத்து தல' திரைப்படத்தினை ஒளிப்பதிவாளர் ஃபரூக் பாஷா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல் எடிட்டிங் செய்துள்ளார்.

பத்து தல திரைப்படம் 2023, மார்ச் 30ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.




பத்து தல திரைப்படத்தின் கதை

கதைக்கரு

சென்னை போலீஸ் கமிஷனர் ராவணன் (AGR) என்பவரை அழிக்க ரசியமாக ஒரு காவலரை நியமிக்கிறார். மஃப்டியில் (AGR)-யை அழிக்க செல்லும் கவுதம் கார்த்திக் (AGR) சிலம்பரசனை பற்றி அறிகிறார். அவரது நோக்கத்தை கண்டு சிலம்பரசன் பக்கம் திரும்பும் கவுதம் கார்த்திக் இறுதியில் என்ன செய்தார் என்பதே படத்தின் கதை.

பத்து தல ரிலீஸ்

சிலம்பரசன் - கவுதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் 'பத்து தல' திரைப்படம் 2023 மார்ச் 30ல் திரையரங்கில் வெளியாகிறது. இத்திரைப்படம் பிரபல ஆன்லைன் ஓடிடி நிறுவனமான 'அமேசான் பிரைம் வீடியோ' நிறுவனத்தில் ஸ்ட்ரீமிங் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பத்து தல திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை 'ஜீ தமிழ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

பத்து தல திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்

பத்து தல திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தின் இயக்குனர் நார்தன் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் 2018-ம் ஆண்டு வெளிவந்த கே.ஜி.எப் என்னும் பான் இந்தியா திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியவர். மேலும் இவர் முஃப்டி என்னும் கன்னட படத்தினை இயக்கியுள்ளார்.

பத்து தல படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் தொடங்கியுள்ளது. இப்படத்தின் இயக்குனர் நார்தன் இப்படத்தில் இருந்து சில காரணங்களால் விலக, பின்னர் நெடுஞ்சாலை, சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணன் என்பவர் இப்படத்தினை இயக்கிய ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இத்திரைப்படமானது பெரிய பட்ஜெட்ல் உருவாகவிருக்கிறது என இப்படத்தின் படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 45வது திரைப்படமாகும் இந்த 'பத்து தல' திரைப்படம்.

முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் சிலம்பரசன் நடித்த காட்சிகளை நீக்கி மீண்டும் சிலம்பரசன் காட்சிகளை மட்டும் புதிதாக தொடங்கபோவதாக படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது, இதற்கு சமீபத்தில் சிலம்பரசன் தனது உடல் எடையை குறைத்துக்கொண்டதே காரணம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+