பட்டாஸ் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், சினேகா, மெஹ்ரீன் பிர்சடா நடித்துள்ள அதிரடி மற்றும் குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து 'சத்யா ஜோதி பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளராக விவேக் மற்றும் மேர்வின் இசையமைத்துள்ளனர்.
அதிரடி மற்றும் நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் பிரகாஷ் மாப்பு எடிட்டிங் செய்துள்ளார்.
இத்திரைப்படம் 2020 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 16ல் வெளியாகும் என படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பட்டாஸ் படத்தின் கணிக்கப்படும் கதை
நாயகன் தனுஷ் ஊர் மக்களுக்காக நல்லது செய்தும் தமிழரின் பழங்காலத்து கலையினை கற்று அதனை ஊர் மக்களுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக வருகிறார். இவருக்கு ஜோடியாக நாயகி சினேகா நடித்துள்ளார். சூழ்ச்சிகள் மற்றும் சில வியாபார தந்திரத்தால் சூழ்ச்சியில் சிக்கும் தனுஷ் குடும்பத்தையும் உயிரையம் இழக்கிறார். இதற்கான காரணம் சினேகா என்று இவரை சிறையில் அடைகின்றனர்.
ஒரு சாதாரணா குடுப்பதில் உள்ள இளைஞராக (மற்றொரு தனுஷ்) மகன் தனுஷ் காதல், நகைச்சுவை என ஜாலியாக வாழ்ந்து வருகிறார். தான் தாய் சினேகா சிறையில் இருப்பதை அறியும் தனுஷ், தன் தாயின் ஆசையை நிறைவேற்ற தனது தந்தையை கொன்றவர்களை பலவாங்குவதே இப்படத்தின் கதை.
பட்டாஸ் படத்தினை பற்றிய பிரத்தியேக தகவல்கள்
பட்டாஸ் படத்தின் இயக்குனர் ஆர் எஸ் துரை செந்தில்குமார், இப்படத்திற்கு முன்பு 2016ல் தனுஷின் இரட்டை வேட நடிப்பில் வெளியான "கோடி" படத்தினை இயக்கியவர். இவர் 2013ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த "எதிர்நீச்சல்" படத்தினை இயக்கி திரையுலகில் அறிமுகமானவர், பின்னர் சிவாவை நாயகனாக கொண்டு "காக்கி சட்டை" படத்தினை இயக்கி தமிழ் திரையுலகில் புகழ் பெற்றுள்ளார்.
பட்டாஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் தனுஷ் நடித்த மாரி 2, அனேகன், மாறி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இப்படத்தின் மூலம் நான்காவது முறையாக இப்படத்தின் நாயகனும் ஒளிப்பதிவாளரும் பணியாற்றியுள்ளனர்.
கோடி படத்தினை தொடர்ந்து இப்படத்திலும் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். கோடி படத்தில் அண்ணன் தம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், இப்படத்தில் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தந்தை கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்க, மகன் கதாபாத்திரத்திர்க்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சடா நடித்துள்ளார்.
மெஹ்ரீன் பிர்சடா 2018ம் ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் வெளியாகியுள்ள "நோட்டா" படத்தில் நடித்து தமிழில் பிரபலமானவர். இப்படத்தின் காப்புரிமை மற்றும் செயற்கைக்கோள் உரிமையை சன் நெட்ஒர்க் நிறுவனம் பெற்றுள்ளது. பின்னர் அமேசான் பிரைம் வீடியோ நிறுவனமும் இப்படத்தின் காப்புரிமையை பெற்றுள்ளது.
பட்டாஸ் படத்தின் ரிலீஸ் மற்றும் அறிவிப்புகள்
பட்டாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2019 ஜூலை 28ல் இணையதள பக்கங்களில் வெளியாகி பிரபலமானது. பின்னர் இப்படத்தின் இசை 2019 டிசம்பரில் முதல் மற்றும் இரண்டாம் பாடல்களான "சில் ப்ரோ" மற்றும் "மொரட்டு தமிழன் டா" பாடல்கள் தனுஷ்-ன் இணையதள ட்விட்டர் பக்கத்தில் வெளியானது.
இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதை தொடர்ந்து இப்படத்தின் எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் 2020 ஜனவரி 7ல் இணையதள பக்கங்களில் சன் நெட்ஒர்க் மற்றும் இப்படத்தின் தயாரிப்பாளரான சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் இணையதள பக்கங்களில் காலை 10:31 மணிக்கு வெளியாகி பிரபலமாகியுள்ளது.