X
பிச்சைக்காரன் 2
Action | Drama | Family | 19 May 2023 | U/A |
Tamil

பிச்சைக்காரன் 2 கதை

பிச்சைக்காரன் 2 - விஜய் ஆன்டனி தானே இயக்கி & நாயகனாக நடித்திருக்கும் குடும்பம் மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இப்படத்தின் நாயகன் விஜய் ஆன்டனி தனது தயாரிப்பு நிறுவனமான "விஜய் ஆன்டனி பிக்சர்ஸ்" மற்றும் "பாத்திமா விஜய் ஆன்டனி" தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து, இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சுவாரஸ்யமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளராக விஜய் ஆன்டனி எடிட்டிங் செய்துள்ளார். பிச்சைக்காரன் 02 திரைப்படத்தில் நாயகன், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் படத்தொகுப்பாளர் என பல்வேரு துறைகளில் விஜய் ஆன்டனி பணியாற்றியுள்ளார்.

பிச்சைக்காரன் 2 திரைப்படம் 2023 மே 19ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.

ஓடிடி: பிச்சைக்காரன் 02 திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை கைப்பற்றிய டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி சேனல், 2023 ஜூன் 18ல் இப்படத்தினை ஸ்ட்ரீமிங் செய்துள்ளது.



பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் கதை

உலகின் ஏழாவது பணக்காரராக விஜய் குருமூர்த்தி (விஜய் ஆன்டனி) வாழ்கிறார். அவரின் நண்பர்களாக இருக்கும் தேவ் கில் & ஜான் விஜய் மற்றும் அவரின் குடும்ப மருத்துவர் ஹரீஷ் பீரடி ஆகியோர் இணைந்து குரு மூர்த்தியிடம் இருந்து அவரது சொத்துக்களை பறிக்க திட்டம் செய்கின்றனர்.

ஒரு மருத்துவரின் காணொளியை காணும் தேவ் கில், அவரின் உதவியில் விஜய் குருமூர்த்தி மூளை அறுவை சிகிச்சை செய்து சத்யா என்னும் இன்னொருவரின் மூளையை வைக்கிறார்.

சத்யா - ஒரு பாசக்காரா அண்ணன். சிறுவயதில் தனது தங்கையை இழக்கும் அவர் தனது தங்கையை பல வழிகளில் தேடி அலைகிறார். குரு மூர்த்தியின் உடல் தன்மைக்கேற்ப சத்யா இருப்பதால் சத்யாவை கடத்தி குரு மூர்த்தியாக மாற்றுகின்றார்.

தனது சொல்படி நடக்க வேண்டும் என சத்யாவை மிரட்டி வைக்கும் தேவ் கில், பல வழிகளில் சித்ரவதை செய்கின்றனர். இறுதியில் தனது பொறுமையை இழக்கும் சத்யா தேவ் கில் மற்றும் அவரது நண்பர்களை கொலை செய்கிறார். 

'நாம் செய்யும் புன்னியம் நாம் தேடுவதை கொடுக்கும்' என்னும் வசனத்தை ஒருவர் சொல்ல, சத்யா மீண்டும் குரு மூர்த்தியாக மாறி மக்களுக்கு நல்ல விஷயங்களை செய்ய தொடங்குகிறார். இவர் செய்யும் நல்ல விஷயங்கள் பலரை மறைமுகமாக பாதிக்கிறது.

இறுதியில் இவரை பற்றி சில உண்மைகள் வெளிவர இவர் போலீசிடம் சரணடைகிறார். இறுதியில் என்ன ஆனது? தனது தங்கையை சத்யா சந்தித்தாரா?  என்பதே படத்தின் கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+