twitter

    பிரான்மலை கதை

    பிரான்மலை இயக்குனர் அகரம்காமுரா இயக்கத்தில் வர்மன், நேகா, கஞ்சா கருப்பு, பாண்டி, வேல ராமமூர்த்தி நடித்துள்ள காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் ஆர் பி பாண்டியன் தயாரிக்க்க இசையமைப்பாளர் பாரதி விஸ்கார் இசையமைத்துள்ளளார்.

    கதை கரு: குடும்ப கௌரவத்திற்கு கலங்கமான காதலை ஊரும் உறவும் எதிர்ப்பதே கதைக்களம்.

    பிரான்மலை ஊரின் முக்கிய தலைக்கட்டான வேலராமமூர்த்தியின் மகன் செல்லப்பாண்டி(வர்மன்). அப்பா போல் இல்லாமல் மிகவும் சாதுவானவர், சிறு வயதிலேயே அம்மாவை இழந்ததால் பாசத்துக்காக ஏங்ககூடிய நபர். இந்நிலையில் பெற்றோரை இழந்து ஆசரமத்தில் வளர்ந்து எல்லோர் மீதும் அன்பு செலுத்தும் நேகா மீது வர்மனுக்கு காதல் மலர்கிறது. நேகாவும் வர்மனை காதலிக்கிறார்.

    அப்பாவிடம் தன் காதலை சொல்ல தயங்கும் வர்மன், நேஹா தங்கியிருக்கும் ஹாஸ்டலில் ஏற்படும் ஒரு பிரச்சனையால், யாருக்கும் தெரியாமல் நேகாவை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த தொடங்குகிறார். தனது மகன், இப்படி, வேற்று மத பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டான் எனத் தெரிந்ததும், இதையடுத்து நடக்கும் அதிரடி சம்பவங்களை அழுத்தமாக பதிவு செய்கிறது பிரான்மலை.



    **Note:Hey! Would you like to share the story of the movie பிரான்மலை with us? Please send it to us ([email protected]).