twitter
    Tamil»Movies»Prince»Story

    ப்ரின்ஸ் கதை

    ப்ரின்ஸ் இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிரேம்ஜி என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் நகைச்சுவை & காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சோனாலி நரங், சுரேஷ் பாபு மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ளார்.

    நகைச்சுவை - காதல் என தமிழ் ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் ஒரு குடும்பப்படமாக உருவாகியுள்ள ப்ரின்ஸ் படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ச ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல் எடிட்டிங் செய்துள்ளார்.

    2022 தீபாவளி பண்டிகை முன்னிட்டு ப்ரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ள, இப்படத்திற்கு தமிழக தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.




    ப்ரின்ஸ் படத்தின் கதை 

    கதைக்கரு

    ஜாதி பிரச்சனையால் வேறுபட்டுள்ள கிராமத்தில், தலைவராக இருக்கும் சத்யராஜ் கிராம மக்களை ஒன்று சேர்க்க போராடி வருகிறார். இந்நிலையில் சத்யராஜ்-ன் மகன் சிவகார்த்திகேயன் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நாயகன் வேலை செய்யும் பள்ளியில் ஆசிரியராக ஒரு வெளிநாட்டு பெண் சேர்கிறார். அவருடன் நாயகனுக்கு காதல் மலர்கிறது. இதனை அறிந்த கிராம மக்கள் ஜாதிகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒரே தேசமாக இணைந்து நாயகன் காதலை எதிர்க்கின்றனர். இவர்களை மீறி நாயகனின் காதல் எப்படி ஜெயித்தது என்பதே படத்தின் கதை.

    இந்த கதையை நகைச்சுவை & உணர்ச்சிப்பூர்வமாக திரைக்கதையாக வடிவமைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் அனுதீப்.

    கதை

    தேவக்கோட்டை எனும் ஊரில் சுதந்திரத்திற்கு பின்னும் பிரெஞ்சுகாரர்களும், பிரிட்டிஷ்காரர்களும் சிலர் இந்தியாவிலேயே தங்கி விடுகின்றனர். அப்படி ஒரு குடும்பத்து பெண்ணான ஜெஸிகாவை (மரியா) பள்ளியில் சமூக அறிவியல் வாத்தியாரான அன்பு (சிவகார்த்திகேயன்) காதலிக்க தொடங்க ஆரம்பத்தில் பிரெஞ்சுக்கார பெண் என ஓகே சொல்லும் அப்பா சத்யராஜ், பின்னர் அந்த பெண் பிரிட்டிஷ்காரி என்பது தெரிய வர மறுப்பு தெரிவிக்கிறார். ஹீரோயின் அப்பாவும் எதிர்ப்பு. இறுதியில், இந்திய வாலிபனும் இங்கிலாந்து பூர்வகுடியான இளம்பெண்ணும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் பிரின்ஸ் படத்தின் கதை.

    ப்ரின்ஸ் படத்தின் பிரத்யேக தகவல்கள்

    ப்ரின்ஸ் படத்தின் இயக்குனர் அனுதீப் 'ஜதி ரத்னலு' என்ற தெலுங்கு படத்தினை இயக்கி இயக்குனராக 2021 ஆம் ஆண்டு அறிமுகமானவர். அப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் இந்த படத்தினை இயக்கியுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.

    ப்ரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு 2022 பிப் 10ல் காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ் உடன் இணைந்து ஆனந்த் ராஜ், பிரேம்ஜி, 'பிராங்க் ஸ்டார்' ராகுல், சதீஸ் கிருஷ்ணன் என பலர் நடித்துள்ளனர்.

    ப்ரின்ஸ் படத்தின் நாயகியாக மரியா ரியாபோஷப்கா என்னும் வெளிநாட்டு நடிகை நடித்துள்ளார். இவர் ஸ்பெஷல் ஓபிஎஸ் என்ற வெப்சீரிஸ் தொடரில் நடித்து இந்தியா சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

    ப்ரின்ஸ் படத்தின் இயக்குனர் அனுதீப் இயக்கிய 'ஜதி ரத்னலு' திரைப்படம் 4 கோடி பொருட்செலவில் உருவாகி 80 கோடிகள் வரை வசூல் சாதனை செய்து அசத்தியுள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல சினிமா நடிகர்கள் அந்த இயக்குனரை நேரில் சென்று வாழ்த்தி தனக்காக ஒரு படம் இயக்க வேண்டும் என கேட்டுள்ளனர். இதில் சிவகார்த்திகேயனின் அழைப்பை ஏற்று தமிழ் - தெலுங்கு என இருமொழிகளில் இப்படத்தினை இயக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் வெற்றி கூட்டணியாக மக்கள் மத்தியில் பிரபலமான சிவகார்த்திகேயன் - சத்யராஜ் கூட்டணி இப்படத்தில் மீண்டும் அமைந்துள்ளது.

    ப்ரின்ஸ் படத்தின் பிசினஸ் ரிப்போர்ட்

    சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் வெளியாகிறது. டாக்டர் மற்றும்  டான் திரைப்படம் பெரிய அளவில் வசூல் சாதனை செய்துள்ள படங்களாகும். இரு படங்களும் அடுத்தடுத்து 100 கோடிகள் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

    ப்ரின்ஸ் திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே சுமார் 90 கோடிகள் வரை வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டிற்கு முன்பே இப்படம் பெரிய அளவில் லாபத்தை பெற்றுள்ளது. இன்னும் தெலுங்கு திரையரங்கு உரிமைகள் விற்கப்படவில்லை, ரிலீசிற்கு முன்பே இப்படம் மொத்தம் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ப்ரின்ஸ் ரிலீஸ்

    இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    ப்ரின்ஸ் திரைப்படம் தீபாவளி பாண்டியை முன்னிட்டு நேரடியாக திரையரங்கில் 2022, அக்டோபர் 21ல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி & ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 
    **Note:Hey! Would you like to share the story of the movie ப்ரின்ஸ் with us? Please send it to us ([email protected]).