twitter
    Tamil»Movies»Psycho»Story

    சைக்கோ கதை

    சைக்கோ இயக்குனர் மிஸ்க்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் இணைந்து தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கமின் டபுள் மீனிங் ப்ரோடுச்டின் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

    அதிரடி மற்றும் திரில்லர் படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் மற்றும் படத்தொகுப்பாளர் அருண்குமார் பணியாற்றியுள்ளனர். இயக்குனர் மிஸ்க்கின் இயக்கும் சைக்கோ படத்தினை ரெட் கியண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, லைக்கா புரொடக்‌ஷன் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. இத்திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் பார்வை இழந்தவராக நடித்துள்ளார்.


    சைக்கோ படத்தின் கதை

    இளம் பெண்கள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு மறுநாளே தலையில்லாமல் பொது இடங்களில் பிணமாக இருக்கின்றனர். இந்த வழக்கை காவல் அதிகாரியாக இயக்குனர் ராம் விசாரித்து வருகிறார். அந்த மர்ம நபர் யார்? ஏன் இதனை செய்கிறார்? என்னும் தகவல்கள் காவல் துறையினருக்கு கிடைக்கவில்லை. சில வருடங்களாகவே இந்த கொடூர சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    பார்வை இழந்த ஒரு மாற்றுத்திறனாளியாக உதயநிதி (கெளதம்) நடித்துள்ளார். இவருக்கு ஆர்.ஜெ அதிதி ராவ் மீது காதல் உண்டாகிறது. நாயகி அதிதி ராவ்-யை ஒரு தலையாக காதலித்து வரும் உதயநிதி ஒரு நாள் தன் காதலை வெளிப்படுத்த செல்கிறார். அச்சமயம் நாயகி அதிதி ராவ்-யை அந்த தொடர் கொலையாளியான "சைக்கோ" கடத்துகிறார்.

    இதனை காவலர்களிடம் அறிவிக்கிறார் உதயநிதி. ஆனால் காவலர்கள் அலட்சியகமாக இருக்கின்றனர். இதனால் உதயநிதி தானே கண்டு பிடிக்க போவதாக முடிவெடுக்கிறார். இதற்கு தனது உடல்நல குறைவால் வேலை இல்லாமல் இருக்கும் நித்யா மேனனின் உதவியுடன் இந்த வழக்கை விசாரித்து அந்த தொடர் கொலையாளிடம் இருந்து தனது காதலியை மீட்கிறார்.

    தனது பார்வை இழந்த மாற்று திறனாளியான உதயநிதி எப்படி தனது காதலியை காப்பாற்றுகிறார் என்பதே இப்படத்தின் மையக்கரு. இதனை அழகான திரைக்கதையில் சுவாரஸ்யமாக இயக்கி வெற்றி கண்டுள்ளார் இயக்குனர் மிஸ்க்கின்.

    சைக்கோ திரைப்படத்தின் ரிலீஸ் மற்றும் அறிவிப்புகள்

    இத்திரைப்படத்தின் ஃபரஸ்ட் லுக் போஸ்டர் 2019 அக்டோபர் 25ல் இணையதள பக்கங்களில் வெளியாகி பிரபலமாகியது. புலன் விசாரணை படமாக உருவாகும் இத்திரைப்படம் 2020ல் வெளியாகலாம் என கூறியுள்ளார் இயக்குனர். 

    சைக்கோ படத்தின் டீஸர் 2019 அக்டோபர் 25ல் இயக்குனர் மணிரத்னம் தனது இணையதள பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். இப்படத்தினை 2019ம் ஆண்டு டிசம்பர் 27ல் வெளியிட முடிவு செய்துள்ள படக்குழு சில காரணங்களால் இப்படத்தினை 2020 ஜனவரி 24ஆம் தேதிற்கு தள்ளி வைத்துள்ளது.

    **Note:Hey! Would you like to share the story of the movie சைக்கோ with us? Please send it to us ([email protected]).
    • Penguin Official Teaser | Keerthy Suresh | Amazon Prime | Breakdown
    • MYSKIN SCOLDING VISHAL | MYSKIN ANGRY SPEECH | THUPPARIVAALAN 2 ISSUE | FILMIBEAT TAMIL
    Go to : Psycho Videos