புலி முருகன் இயக்குனர் வைசாக் இயக்கத்தில் மோகன்லால், கமலினி முகர்ஜி, ஜெகபதி பாபு, நமீதா, கிஷோர் மற்றும் பலர் நடித்த அதிரடி த்ரில்லர் திரைப்படம்.
இத்திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி பல கோடி வசூலித்த வெற்றித்திரைப்படம் ஆகும். இத்திரைப்படம், தமிழில் டப் செய்து தமிழில் வெளியாகவுள்ளது. அதுவும் 3 டி வடிவமைப்பில்.
தமிழில் டப் செய்த புலிமுருகன் திரைப்படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் இன்று வெளியாகிறது.