twitter

    ராவணன் கதை

    ராவணன் 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். மணிரத்னம் இப்படத்தின் கதையை எழுதி இயக்கினார். சுகாசினி மணிரத்தினம் இதற்கு உரையாடல் எழுதினார். விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தில் கார்த்திக், பிரபு, பிரியாமணி என்று மேலும் பலர் நடித்தனர். ஏ. ஆர். ரகுமான் இப்படத்துக்கு இசையமைத்தார். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும், ராவன் என்ற பெயரில் இந்தியிலும் வெளியிடப்பட்டது.

    கதை:

    பழங்குடி மக்களுக்கு சகலமுமாக இருப்பவர் வீரா (விக்ரம்). அண்ணன் சிங்கம் (பிரபு), தம்பி சக்கரை (சித்தார்த்), தங்கை வெண்ணிலா (பிரியாமணி) என வாழ்ந்து வருகிறார். ஊரே அவர் சொல்வதைக் கேட்கிறது. அவருக்காக உயிரைத் தரவும் தயாராக உள்ளது. ஆனால் சட்டத்தின் பார்வையில் அவர் மோசமானவர்.

    அவரை வேட்டையாட தேவ் (பிரித்விராஜ்) என்ற அதிகாரி தலைமையில் சிறப்பு அதிரடிப்படை வருகிறது. தேவின் மனைவி ராகினி (ஐஸ்வர்யா ராய்).

    வீராவின் தங்கைக்கு திருமணம் நடக்கும்போது அதிரடிப் படை அந்த இடத்தில் நுழைந்து வீராவை சுட, குண்டு காயத்துடன் அவர் தப்பிக்கிறார். அவர் தங்கை வெண்ணிலாவை தூக்கிச் செல்லும் அதிரடிப் படையினர் அவரைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகின்றார்கள். வீடு திரும்பும் அவர் வீராவிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

    இதனால், காவல்துறை அதிகாரி தேவைப் பழிவாங்க, அவன் மனைவி ராகினியை கடத்திப் போகிறார் வீரா. ஆரம்பத்தில் வீராவை வெறுக்கும் ராகினி, அவர் தங்கைக்கு நேர்ந்த சோகம், அதற்கு தன் கணவனும் ஒரு காரணம் என்பதை அறிந்து அமைதியாகிறார். ராகினி மீது வீராவுக்கு மோகம் பிறக்க, அதை ராகினியிடமே சொல்கிறார்.

    ஒரு கட்டத்தில் வீராவின் தம்பியையும் தேவ் கொல்கிறார். இதைத் தொடர்ந்து வரும் சண்டையில் வீராவும் காவல்துறையினரும் கடுமையாக மோதுகிறார்கள். கடைசியில், ராகினிக்காக அவரது கணவரான தேவைக் கொல்லாமல் விடுகிறார் வீரா. ராகினியையும் விடுவித்து அனுப்பி விடுகிறார்.

    கணவனோடு தொடருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருக்கும் ராகினியின் கற்பை சந்தேகப்படுகிறார் கணவர் தேவ். இதனால் கோபமடையும் ராகினி மீண்டும் வீராவிடமே திரும்புகிறார்.

    பழைய இடத்தில் வீராவைச் சந்திக்கும் ராகினி, தன் கணவனின் சந்தேக உணர்வை வருத்தத்துடன் வெளிப்படுத்துகிறார். ராகினியை தன் இடத்திற்குப் பின் தொடரவேன்டியே, இந்த சூழ்ச்சியில் தேவ் ஈடுபட்டது வீராவிற்கு புரிகிறது. காவல் படையின் உதவியுடன் வீராவைச் சுற்றி வளைக்கும் தேவ், துப்பாக்கி குண்டுகளால் துளைப்பதை வீரா, வீரமாக எதிர்கொண்டு மரணிக்கிறார். மலையில் இருந்து விழும் வீராவை, ராகினி அலறலுடன் பிரிகிறாள். 'நான் வருவேன்' என்ற பாடலுடன் திரைப்படம் முடிவுக்கு வருகிறது.
    **Note:Hey! Would you like to share the story of the movie ராவணன் with us? Please send it to us ([email protected]).