twitter

    ராஜாவுக்கு செக் கதை

    ராஜாவுக்கு செக் இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கத்தில், சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி, திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சோமன் பல்லாட்ட தயாரிக்க, இசையமைப்பாளர் வினோத் எஜமான்யா இசையமைத்துள்ளார்.

    அதிரடி திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை எம் எஸ் பிரபு ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் எ எஸ் பிரேம் எடிட்டிங் பணிசெய்துள்ளார். இப்படத்தின் நடிகர் சேரன் உடன் சிருஷ்டி டாங்கே, சரயு, இர்பான் என பலர் நடித்துள்ளனர்.

    ராஜாவுக்கு செக் படத்தின் கதை

    சேரன் ஒரு போலீஸ் அதிகாரியாக வருகிறார். தனது கடமையில் நேர்மையாக இருக்கும் இவர் பல பிரச்சனைகளை சந்திக்கிறார். இதனால் இவருக்கும் இவர் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் இவர்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கின்றனர். பல வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. சேரனின் மனைவி மற்றும் மகள் வெளிநாட்டிற்கு செல்ல முடிவெடுக்கின்றனர். தனது மகளுடன் ஒரு 10 நாட்கள் இருக்க வேண்டும் என ஆசைப்படும் சேரன் தனது மகளுடன் 10 நாட்கள் வாழ்கிறார்.

    சேரன் தனது பணியில் நேர்மையாக இருந்து கொண்டு சரியாக தூங்காமல் இருக்கிறார். சரியான தூக்கம் இல்லாத காரணத்தால், இவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார். இவர் தன் நிலை மறந்து பல இடங்களில் அய்ர்ந்து தூங்கி விடுகிறார். ஒரு 5 நாட்கள் வரை தொடர்ச்சியாக தூங்குகிறார். உடல் ரீதியாக பெரிய பிரச்சனையாக அது மாறுகிறது.

    காவலராக பணி செய்யும் சேரன், ஒரு பெண்ணை கடத்தியதற்காக ஒரு நான்கு இளைஞர்களை கைது செய்கிறார். அவர்கள் பணக்கார வீட்டை சேர்ந்தவர்கள் என அறியும் சேரன், தனது சாமர்த்தியத்தால் இந்த வழக்கினை கையாண்டு அவர்களை ஒரு வருடம் சிறையில் அடைக்கிறார்.

    சிறையில் இருக்கும் அந்த நான்கு இளைஞர்களும் சேரனை பழிவாங்க துடிக்கின்றனர். சேரன் மகளை அவளது பிறந்த நாள் அன்று கடத்துகிறார்கள் . கடத்தி அவளை துன்புறுத்துகிறார்கள். கடைசியில் சேரன் மகளை கண்டு பிடித்தாரா இல்லையா என்பதை விறு விறுப்பாக பல டிவிஸ்ட்களுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சாய் ராஜ்குமார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie ராஜாவுக்கு செக் with us? Please send it to us ([email protected]).