ரங்கோலி - இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் முருகதாஸ், ஹமரேஸ், பிராத்தனா சந்தீப், சாய்ஸ்ரீ பிரபாகரன், அக்ஷயா ஹரிஹரன் என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் பாபு ரெட்டி தயாரிக்க, இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கே எஸ் இசையமைத்துள்ளார்.
ரங்கோலி திரைப்படத்தின் கதை
அரசு பள்ளியில் படிக்கும் ஹம்ரேஷ், தீடிரென கான்வென்ட் பள்ளிக்கு மாற்றுகிறார், அவரின் தந்தை முருகதாஸ். அரசு பள்ளி மாணவனை கான்வென்ட் பள்ளி மாணவர்கள் பல இடங்களில் அவமதித்து வருகின்றனர். படிக்கும் காலத்தில் இந்த வேற்றுமைக்கு காரணம் என்ன? சமூகத்தில் இந்த பிரச்சனைகள் எங்கிருந்து தொடங்குகிறது என பல விஷயங்களை இப்படத்தின் மூலம் எடுத்து காட்டியுள்ளார், இயக்குனர்.