X
ரிபெல்
Action | Drama | Family | 22 Mar 2024 | U/A | 141 Mins
Tamil

ரிபெல் கதை

ரிபெல் - இயக்குனர் நிகேஷ் ஆர் எஸ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, ஆதித்ய பாஸ்கர், கருணாஸ் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமா முன்னணி தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா 'ஸ்டூடியோ கிரீன்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இப்படத்தின் நாயகன் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

அதிரடி திரைக்களம் மற்றும் ஜனரஞ்சகமான திரைப்படமாக உருவாகியுள்ள ரிபெல் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் வெற்றி கிருஷ்னன் எடிட்டிங் செய்துள்ளார்.

2024 மார்ச் 22ல் உலகமெங்கும் வெளியாகும் ரிபெல் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. 



ரிபெல் திரைப்படத்தின் கதை

கேரளா மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களை அடக்கி வாழ நிணைக்கும் சில மலையாள அரசியல் பின்னணி கொண்ட நபர்களை எதிர்த்து போராடுவது தான், ரிபெல் திரைப்படத்தின் கதை. இந்த கதைக்களம் நாயகன் படிக்கும் கல்லூரியில் இருந்து தொடங்கி பின் வாழ்வுரிமை போன்ற விஷயங்களை பேசியுள்ளது.

மூணாறில் இருந்து கேரளாவுக்கு படிக்க ஜி.வி. பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் செல்கின்றனர். அங்கே ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை தமிழர்களை இழிவாக நடத்துகின்றனர். ஆனால், மலையாள ஹீரோயினான மமிதா பைஜுவுக்கும் ஹீரோவுக்கும் காதல் டிராக் ஓடுகிறது. இடைவேளைக்குப் பிறகு தங்களை மட்டம் தட்டும் மலையாளிகளை எதிர்த்து ஹீரோவும் அவரது நண்பர்களும் திருப்பி பதிலடி கொடுத்தார்களா? இல்லையா? என்பது தான் இந்த கதை. 80களில் நடைபெற்ற நிஜமான சம்பவத்தை அடிப்படையில் கொண்டு தான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+