X
ஆர் ஆர் ஆர் -
Action | Adventure | History | 25 Mar 2022 | U/A | 182 Mins
Tamil

ஆர் ஆர் ஆர் - கதை

ஆர் ஆர் ஆர் - (இரத்தம் ரணம் ரௌத்திரம்) இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் வரலாற்று நிகழ்வை சார்ந்து எடுக்கப்பட்டுள்ள அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் தனய்யா தயாரிக்க, இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார்.

தெலுங்கு திரைப்படமாக இப்படம் உருவாக்கப்பட்டு தமிழ், ஹிந்தி, கன்னடம், மற்றும் மலையாளம் என இந்தியாவில் ஐந்து மொழிகளில் ஒரு "பேன் இந்திய" படமாக ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க அலியா பட், ஷ்ரியா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி என இந்திய சினிமா திரை நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

ஆர் ஆர் ஆர் படத்திற்கு ஒளிப்பதிவாளர் செந்தில் குமார் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படம் ₹550 கோடி செலவில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட படைப்பு ஆகும். இப்படத்தினை தமிழில் 'லைக்கா புரோடக்ஷன்' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.

ஆர்.ஆர்.ஆர் படத்தின் புகைப்படங்கள்

ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர், ப்ரோமோ, பாடல்கள் என முழு வீடியோக்கள்

ஆர்.ஆர்.ஆர் படத்தில் பணியாற்றியுள்ள படக்குழு / திரைநட்சத்திரங்கள்

ஆர் ஆர் ஆர் படத்தின் கதை

கதைக்கரு

காட்டுப்பகுதில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு பச்சைக் குத்தும் போது ரம்மியமாக பாடும் மல்லியின் குரல் பிடித்துப் போக காசுகளை தூக்கி எறிந்து விட்டு அந்த சிறுமியையே கடத்திச் செல்கின்றனர். அந்த சிறுமியை காப்பாற்ற காப்பான் ஜூனியர் என்.டி.ஆர் செய்யும் முயற்சிகளும், அந்த குழந்தையை காப்பாற்ற வரும் காப்பானை கைது செய்ய ராம்சரணுக்கு உத்தரவு கொடுக்கப்பட்ட நிலையில், பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரியான ராம்சரண் என்ன செய்தார் என்பதே RRR படத்தின் கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+