X
ருத்ர தாண்டவம்
Action | 01 Oct 2021 | U/A | 169 Mins
Tamil

ருத்ர தாண்டவம் கதை

ருத்ர தாண்டவம் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, ராதா ரவி என தமிழ் திரைநட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி தனது 'ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜூபின் இசையமைத்துள்ளார்.

சமுதாய கருத்துக்கள் உள்ளடங்கிய ஒரு அதிரடி - திரில்லர் கதை களத்தில் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள ருத்ர தாண்டவம் படத்திற்கு ஒளிப்பதிவாளர் திரு. ஃபாரூக்.ஜெ ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் திரு. எஸ் தேவராஜ் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படம் சர்ச்சைக்குரிய திரைக்ககதையில் உருவாகி படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு விமர்சனங்களை சந்தித்து 2021 அக்டோபர் 01ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.




ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் கதை

கதைக்கரு: சென்னைக்கு போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளராக பணிக்கு வரும் காவலர் ருத்ர பிரபாகரன் (ரிச்சர்ட்) போதை கடத்தல் செய்யும் சிலரின் மீது நடவெடிக்கை எடுக்க, இதனால் கோபமடையும் கவுதம் மேனன் இவரை காவல் துறையில் இருந்து சூழ்ச்சி செய்து விரட்டுகிறார். இதனை தொடர்ந்து ஜாதி வெறியன் என மக்கள் மத்தியில் நாயகனை அவமானப்படுத்துகிறார், கவுதம் மேனன். பின் என்ன நடந்து என்பதே படத்தின் கதைக்கரு.

ருத்ர தாண்டவம் திரைப்படம் பற்றிய பிரத்யேக தகவல்கள்

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு வெளியான 'திரௌபதி' படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து உருவாகும் திரைப்படம் தான் ருத்ர தாண்டவம். 2020 ஆம் ஆண்டு திரௌபதி திரைப்படம் பல விமர்சனங்களில் சிக்கி, தமிழ் சினிமாவில் அந்த ஆண்டின் மாபெரும் வெற்றி பெற்ற படமாகும். 

திரௌபதி படத்தினை தொடர்ந்து மோகன் ஜி இயக்கும் இத்திரைப்படமும் சர்ச்சைக்குரிய கதையில் உருவாகி தமிழகத்தில் விமர்சனங்களில் சிக்கியுள்ளது. ருத்ர தாண்டவம் திரைப்படம் பல பிரச்சனைகளை கடந்து கொரோனா நோய் பரவல் இரண்டாம் அலைக்கு பின் தமிழக தியேட்டர்கள் திறந்ததும் இப்படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் டிரைலர் 2021 ஆகஸ்ட் 24ல் இணையத்தில் வெளியாகி பலரின் கவனத்தில் பிரபலமான நிலையில் பாடல்கள் மற்றும் ப்ரோமோ வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி மக்களின் கவனத்தை கவர்ந்து பிரபலமாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+