twitter

    சாணிக் காயிதம் கதை

    சாணிக் காயிதம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மற்றும் இயக்குனர் செல்வராகவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

    இரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு அதிரடி படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் யாமினி யங்கனமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் நகூரன் எடிட்டிங் செய்துள்ளார்.

    இத்திரைப்படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவுப்பு 2020 நவம்பர் 15ல் இணையதள ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. சாணிக் காயிதம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி செயலியில் 2022 மே 6ல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.


    சாணிக் காயிதம் திரைப்படத்தின் கதை

    1979 காலகட்டங்களில் இப்படத்தின் கதை நடப்பதாக காட்டப்படுகிறது. இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் பொன்னி (கீர்த்தி சுரேஷ்) நடித்துள்ளார். பரதேசபட்டினம் என்ற ஊரில் தன் கணவர் மற்றும் மகளுடன் நிம்மதியாக வாழ்கிறார், கீர்த்தி சுரேஷ். 

    கீர்த்தியின் கணவர் ஒரு அரிசி மில்லில் வேலை செய்கிறார். அந்த மில் முதலாளி தன்னை ஒரு மேல்சாதி நபராக நினைத்துக்கொண்டு அங்கு வேலை செய்பவர்களை தவறாக பேசுகிறார். கீர்த்தியின் கணவர் அதனை தட்டி கேட்க, இதனால் பிரச்சனை ஏற்பட்டு கீர்த்தியின் கணவருக்கு வேலை போகிறது.

    மறுநாள் கீர்த்தியின் கணவர், மில் முதலாளியிடம் மன்னிப்பு கேட்டு வேலைக்கு சேர வருகிறார். அங்கு அவரையும், அவரது மனைவி கீர்த்தி சுரேஷ் பற்றி தவறாக சித்தரித்து பேசுகின்றனர் முதலாளி மற்றும் அவரது கூட்டாளிகள். இதனை கேட்ட கீர்த்தியின் கணவர் முதலாளி மற்றும் அவரது கூட்டாளிகளை அவமதித்து விட்டு செல்கிறார்.

    இதனால் கோபமடைந்த முதலாளி அவரை பழிவாங்க, கீர்த்தியின் கணவர் மற்றும் மகள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்கள் குடிசைக்கு தீ வைத்து கொள்கிறார்கள். பின் காவலராக இருக்கும் கீர்த்தியை கொடூரமாக தாக்கி, கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்.

    ஒரு நொடியில் அனைத்தையும் இழந்து நிற்கும் பொன்னிக்கு (கீர்த்தி சுரேஷ்) ஆறுதலாக அவரது அண்ணன் செல்வராகவன் துணை நிற்க, கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்தை அழித்து, தன்னையும் நாசம் செய்த கும்பலை தேடி பழிவாங்குவதே இப்படத்தின் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie சாணிக் காயிதம் with us? Please send it to us ([email protected]).