X
தமிழ் » திரைப்படங்கள் » சாணிக் காயிதம்
சாணிக் காயிதம்

சாணிக் காயிதம்

Action | Drama | Period | 06 May 2022 | A | 136 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

சாணிக் காயிதம் கதை

சாணிக் காயிதம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மற்றும் இயக்குனர் செல்வராகவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு அதிரடி படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் யாமினி யங்கனமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் நகூரன் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவுப்பு 2020 நவம்பர் 15ல் இணையதள ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. சாணிக் காயிதம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி செயலியில் 2022 மே 6ல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. சாணிக் காயிதம் திரைப்படத்தின் டிரைலர்/டீசர் வீடியோக்கள் சாணிக் காயிதம் திரைப்படத்தின் கதை 1979 காலகட்டங்களில் இப்படத்தின் கதை நடப்பதாக காட்டப்படுகிறது. இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் பொன்னி (கீர்த்தி சுரேஷ்) நடித்துள்ளார். பரதேசபட்டினம் என்ற ஊரில் தன் கணவர் மற்றும் மகளுடன் நிம்மதியாக வாழ்கிறார், கீர்த்தி சுரேஷ்.  கீர்த்தியின் கணவர் ஒரு அரிசி மில்லில் வேலை செய்கிறார். அந்த மில் முதலாளி தன்னை ஒரு மேல்சாதி நபராக நினைத்துக்கொண்டு அங்கு வேலை செய்பவர்களை தவறாக பேசுகிறார். கீர்த்தியின் கணவர் அதனை தட்டி கேட்க, இதனால் பிரச்சனை ஏற்பட்டு கீர்த்தியின் கணவருக்கு வேலை போகிறது. மறுநாள் கீர்த்தியின் கணவர், மில் முதலாளியிடம் மன்னிப்பு கேட்டு வேலைக்கு சேர வருகிறார். அங்கு அவரையும், அவரது மனைவி கீர்த்தி சுரேஷ் பற்றி தவறாக சித்தரித்து பேசுகின்றனர் முதலாளி மற்றும் அவரது கூட்டாளிகள். இதனை கேட்ட கீர்த்தியின் கணவர் முதலாளி மற்றும் அவரது கூட்டாளிகளை அவமதித்து விட்டு செல்கிறார். இதனால் கோபமடைந்த முதலாளி அவரை பழிவாங்க, கீர்த்தியின் கணவர் மற்றும் மகள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்கள் குடிசைக்கு தீ வைத்து கொள்கிறார்கள். பின் காவலராக இருக்கும் கீர்த்தியை கொடூரமாக தாக்கி, கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். ஒரு நொடியில் அனைத்தையும் இழந்து நிற்கும் பொன்னிக்கு (கீர்த்தி சுரேஷ்) ஆறுதலாக அவரது அண்ணன் செல்வராகவன் துணை நிற்க, கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்தை அழித்து, தன்னையும் நாசம் செய்த கும்பலை தேடி பழிவாங்குவதே இப்படத்தின் கதை.
Read More

சாணிக் காயிதம் நடிகர்கள் & படக்குழுவினர்

சாணிக் காயிதம் அணியின் தகவல்

இயக்குனர் அருண் மாத்தேஸ்வரன்
ஒளிப்பதிவாளர் யாமினி யங்கனமூர்த்தி
தொகுப்பாளர் நகூரன்
இசை சாம் சி எஸ்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சாணிக் காயிதம் விமர்சகர்களின் விமர்சனம்

தமிழ் XP
மொத்தத்தில் சாணிக்காயிதம் – ரசிக்கலாம்
பிலிம் கிரேஸி
உலக படங்களில் இரத்தம் தெறிக்கும் சைக்கோ தனமான படத்தை பார்க்க விரும்புகிறவர்களா நீங்கள்! இந்த படம் உங்களுக்காக!!
தமிழ் சமயம்
அருண் மாதேஸ்வரனின் முந்தைய படமான ராக்கியை போலவே இந்தப்படமும் ரத்தம் தெறிக்க தெறிக்க படமாக்கப்பட்டுள்ள பழிவாங்கல் கதை.
பில்மிபீட்
மொத்தத்தில் சாணி காயிதம் சுமாரை விட கம்மி தான்.

சாணிக் காயிதம் ட்ரெய்லர்

Video Thumbnail

சாணிக் காயிதம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சாணிக் காயிதம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+