Don't Miss!
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- News
மக்களே நோட் பண்ணிக்கோங்க.. சில சாலைகளில் குப்பை கொட்டினால் அபராதம்..சென்னை மாநகராட்சி சூப்பர் பிளான்
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கூலான "சதக்...சதக்" சீன்கள்...சைகோதனத்திற்கு தீனி போடுகிறதா தமிழ் சினிமா ?
சென்னை : தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக வெளியாகி வரும் பெரிய நடிகர், நடிகைகளின் படங்களில் வன்முறை காட்சிகள், அதிலும் ஒரு கொலையை ரசித்து, ருசித்து, ரொம்ப கூலாக செய்வது போன்ற சீன்கள் அதிகம் இடம்பெற்று வருகின்றன.
2022 ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு, ரிலீசாகி உள்ள டாப் நடிகர்களின் படங்கள் என்றால் அது அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணி காயிதம். இந்த மூன்று படங்களிலும் ஒரு குற்றத்தை, ஒரு சம்பவத்தை காட்சியில் கொண்டு வருவதற்கு எதற்காக இத்தனை கொடூரமாக கொண்டு வர வேண்டும் என நினைத்துள்ளார்கள் தெரியவில்லை.
மாஸ்
நடிகரின்
படம்
ஓடாமல்
போனதுக்கு
டாப்
நடிகர்
தான்
காரணமா?
மேனேஜர்
மூலம்
பார்க்கப்பட்ட
வேலை!

டிவிக்கு மட்டும் தான் ரூல்சா
டிவியிலோ அல்லது சினிமாவிலோ ரத்தம் சொட்டும் காட்சிகள், கொலை சம்பவங்கள், குழந்தைகள், பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் முகங்கள் ஆகியவற்றை காட்டக் கூடாது என ஒரு சட்டத்தில் ரூல் உள்ளது. இதனால் தான் சீரியல்களில் கூட அடிபட்டு ரத்தம் வருவதை போல் காட்டும் சீன்களை பிளாக் அண்ட் ஒயிட்டில் காட்டுகிறார்கள் அல்லது Blur செய்து காட்டுகிறார்கள்.

எதற்கு இப்படி ஒரு சீன்
ஆனால் அதிகமானவர்கள் பார்ப்பார்கள், பார்க்க வேண்டும் என எடுக்கப்படும் சினிமாக்களில் இவை எதுவும் இருப்பதில்லை. வலிமை படத்தில் செயின் பறிப்பு, போதைப் பொருள் திருட்டிற்காக நடத்தப்படும் கொலைகள், பைக்ஸ்னாசர்கள் செய்யும் கொலைகளை காட்டும் போது அத்தனை கொடூரம் தேவையா என கேட்க தோன்றுகிறது. முன்பெல்லாம் தமிழ் சினிமாக்களில் ஒருவர் கத்தியால் குத்துவதை போல் ஒரு சீன் வைத்தால், ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ கத்தியால் குத்துவதாக காட்டுவார்கள். ஆனால் வலிமை படத்தில் ஒருவர், பைக்கில் வரும் 10 பேர் வரிசையாக சரமாரியாக கத்தியால் கீறி போவதை போல் காட்டப்படும்.

கொடூரத்தின் உச்சம்
வலிமை படத்திலாவது குற்ற சம்பவங்களை காட்ட அப்படி ஒரு சீன் வைத்திருந்தார்கள். ஆனால் பீஸ்ட் படத்தில் ஹீரோ விஜய்யே, சர்வ சாதாரணமாக இரண்டு கத்திகளை வைத்து கழுத்தை அறுத்தே தீவிரவாதிகளை கொலை செய்வதை போல் காட்டப்பட்டிருக்கும். அது மட்டுமல்ல, ஒருவரை விஜய் கத்தியால் தொடர்ந்து குத்திக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவரது முகத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் இருப்பார். என்ன தான் ரா ஏஜன்டாக இருந்தாலும் மிக சர்வ சாதாரணமாக கொலை செய்வதாக காட்டுவது கொடூரத்தின் உச்சம்.

கூலான கொலைகள்
இதே போல் சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேசும் கத்தியால் குத்திக் கொண்டே இருப்பார். கெட்டவர்களை தீ வைத்து எரிக்க முடியவில்லை என ஆசிட்டை அவர்கள் மேல் ஊற்றுவதாக ஒரு சீன் வைத்துள்ளார்கள். க்ளைமாக்சில் ஆசிட் ஊற்றும் காட்சிகளில், கீர்த்தி சுரேஷிற்கு குளோசப் ஷாட் வைத்திருப்பார்கள். குழந்தை தனமான முகத்துடன் மிகவும் ரசித்து, கூலாக ஆசிட் ஊற்றுவதை போல் காட்டியிருப்பார்கள். மற்றொருவரை அரிவாளை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்வார்.

சைக்கோதனத்திற்கு தீனியா
இத்தகைய கொடூர காட்சிகள் தமிழ் சினிமாக்களில் அதிகரித்து வருவதை பார்க்கும் போது, மக்கள் கொடூரத்தை விரும்புகிறார்கள் என டைரக்டர்கள் நினைக்கிறார்களா அல்லது மக்களுக்குள் ஒளிந்திருக்கும் சைகோதனத்திற்கு தீனி போடுகிறார்களா. கெட்டவர்களை பழிவாங்குவது தான் கதை என்றால் அதை காட்ட எத்தனையோ முறைகள் உள்ளன. ஏற்கனவே பல விஷயங்களை சினிமாவை பார்த்து தான் கற்றுக் கொண்டேன், அதில் செய்வதை போல் செய்தேன் என்று பலர் நிஜத்தில் கூறுவதை கேட்டு வரும் நிலையில், பாதிக்கப்படும் ஒருவர் பழிவாங்குவதற்காக கொடூரத்தின் உச்சத்திற்கு செல்வது தவறில்லை என்பது மக்கள் மனதில் விதைக்க முயல்கிறார்களா இன்றைய டைரக்டர்கள் என தோன்றுகிறது.

என்ன சொல்ல வர்றீங்க
ஓடிடி ரிலீஸ் படங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என்பதற்காக எதை வேண்டுமானாலும் காட்டலாம் என நினைக்கிறார்களா தெரியவில்லை. உண்மை சம்பவ அடிப்படையிலான கதை என்பதற்காக இன்றைய டைரக்டர்கள் கற்பனை என்ற பெயரில் சேர்க்கும் கொடூரங்களை பற்றிய ஏன் யாரும் பேசுவதில்லை என்பதை சோஷியல் மீடியாவில் பலர் கேள்வியாக எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே மக்களிடம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் குணம் குறைந்து வருவதாக பரவலாக கருத்து நிலவி வரும் நிலையில், இது போன்ற படங்கள் இன்றைய சமூகத்திற்கு தேவை தானா. பீஸ்ட், சாணி காயிதம் போன்ற படங்களின் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் டைரக்டர்கள் என கேள்வி எழுகிறது.