சபா நாயகன் - இயக்குனர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்திரி என பல பிரபலங்கள் நடித்திருக்கும் காதல் - நகைச்சுவை திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
காதல் மற்றும் நகைச்சுவை திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பாலா சுப்ரமணியெம், தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் இணைந்து ஒளிப்பதிவு பணிகளை செய்ய, படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா எடிட்டிங் செய்துள்ளார்.
இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2023 டிசம்பர் 22ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
சபா நாயகன் திரைப்படத்தின் கதை
பள்ளி காதல், இளங்கலை கல்லூரியில் ஒரு காதல் பின் எம் பி ஏ கல்லூரியில் மற்றொரு காதல் என தனது வாழ்வின் வெவ்வேறு பருவங்களில் 3 பெண்களைக் காதலிக்கும் நாயகன் இறுதியில் யாரை திருமணம் செய்து கொள்கிறார், என்பதே இப்படத்தின் கதைக்கரு.