சைத்தான் இயக்குனர் பிரதி கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில் இவருடன், அருந்ததி நாயர் மாற்றும் அலிஷா அப்துல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
கதை :
தினேஷ் (விஜய் ஆண்டனி) ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அருந்ததி நாயரை தினேஷிற்கு திருமணம் செய்துவைக்கின்றனர் அவரது குடும்பத்தினர்.
அந்நேரத்தில், அவருக்கு அடிக்கடி ஒரு குரல் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்த குரல் அடிக்கடி ஜெயலட்சுமி என்ற பெயரை உச்சரிப்பதோடு அவரை தற்கொலை செய்யவும் தூண்டுகிறது.
ஒரு சைக்கோ போன்ற இவரது நடவடிக்கையால் மனஉளைச்சலுக்கு உண்டான இவரது குடும்பத்தினர் மருத்துவரிடம் அழைத்து செல்கின்றனர்.
அங்கு என்ன நடக்கின்றது ? அந்த குரல் தினேஷிற்கு கேட்க காரணம் என்ன ? கடைசியில் இவர் மாறும் விதம் என முற்றிலும் மாறுப்பட்ட கதையாக நகர்வதே மீதிக்கதை.