X
சைத்தான்

சைத்தான்

Romance | Thriller | 01 Dec 2016 | U/A | 123 Mins
Tamil

2.6 /5 Users

2 /5 Filmibeat

சைத்தான் கதை

சைத்தான் இயக்குனர் பிரதி கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில் இவருடன், அருந்ததி நாயர் மாற்றும் அலிஷா அப்துல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. கதை : தினேஷ் (விஜய் ஆண்டனி) ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அருந்ததி நாயரை தினேஷிற்கு திருமணம் செய்துவைக்கின்றனர் அவரது குடும்பத்தினர்.  அந்நேரத்தில், அவருக்கு அடிக்கடி ஒரு குரல் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்த குரல் அடிக்கடி ஜெயலட்சுமி என்ற பெயரை உச்சரிப்பதோடு அவரை தற்கொலை செய்யவும் தூண்டுகிறது.  ஒரு சைக்கோ போன்ற இவரது நடவடிக்கையால் மனஉளைச்சலுக்கு உண்டான இவரது குடும்பத்தினர்  மருத்துவரிடம் அழைத்து செல்கின்றனர்.  அங்கு என்ன நடக்கின்றது ? அந்த குரல் தினேஷிற்கு கேட்க காரணம் என்ன ? கடைசியில் இவர் மாறும் விதம் என முற்றிலும் மாறுப்பட்ட கதையாக நகர்வதே மீதிக்கதை. 
Read More

சைத்தான் நடிகர்கள் & படக்குழுவினர்

சைத்தான் அணியின் தகவல்

இயக்குனர் பிரதி கிருஷ்ணமூர்த்தி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை விஜய் ஆண்டனி
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சைத்தான் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
முன்ஜென்ம கதை. அமரர் சுஜாதாவின் 'ஆ' நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என்றெல்லாம் வந்த செய்திகள் சைத்தானுக்கு ஒரு வித எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியது என்னமோ உண்மைதான். படம் முழுக்க விஜய் ஆன்டனியையே காட்டிக் கொண்டிருப்பது கொஞ்சமல்ல, ரொம்பவே சலிப்புத் தட்டுகிறது. கொஞ்சம் மற்றவர்களையும் நடிக்க விடுங்க பாஸ்! சுஜாதாவின் ஆ கதை எழுதப்பட்ட விதம், ஒவ்வொரு அத்தியாயத்தையும் அவர் முடித்த ஸ்டைல் செம்மையாக இருக்கும். அதை அப்படியே திரைக்கதைப்படுத்தியிருந்தால் இந்தப் படம் வேற லெவல். ஆனால் பின்பாதியில் சொந்தச் சரக்கு சேர்க்கிறோம் என்ற பெயரில் சொதப்பிவிட்டார்கள். சாப்ட்வேர் எஞ்ஜினீயர், சாஃப்ட் தமிழ் ஆசிரியர் என இரண்டு வேடங்களில் விஜய் ஆன்டனி. வேடமெல்லாம் ஓகே.. ஆனால் இவ்வளவு மென்மையான ஆசாமி, கடைசியில் மசாலாப்பட ஹீரோக்கள் மாதிரி எதிரிகளைக் காற்றில் பறக்க விட்டு அடிப்பதைப் பார்த்து தியேட்டர் சிரிக்கிறது. காதல் காட்சிகள் விஜய் ஆன்டனிக்கு இன்னும் ஆசிட் டெஸ்ட் மாதிரிதான் உள்ளன. அருந்ததி நாயர் அழகு. ஆனால் அவரது பாத்திரப்படைப்பில் செம குழப்பம். முருகதாஸ் பாத்திரம் சின்னச் சின்ன வசனங்களில் சிரிக்க வைத்தாலும், அவர் பாத்திரத்தை இன்னும் கவனமாகச் செதுக்கியிருக்கலாம். பின்னணி இசையில் மிரட்டி இருக்கும் விஜய் ஆன்டனி, ஒரு பாடலில் மட்டும் ஜெயித்திருக்கிறார். மற்ற பாடல்கள் நான்கைந்து இன்டர்வெல்லுக்கு சமம். முதல்பாதி சுவாரஸ்யமாக இருந்தாலும், ரசிகர்கள் மனசில் நிற்கவேண்டிய இரண்டாம்பாதி சவசவ வென கடந்து போவதால், படம் குறித்து எந்த அபிப்பிராயமும் இல்லாமல் வெளியில் வரவேண்டியிருக்கிறது.

சைத்தான் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

சைத்தான்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+