»   »  பிச்சைக்காரன் ரேஞ்சுக்கு இருக்கா சைத்தான்..?

பிச்சைக்காரன் ரேஞ்சுக்கு இருக்கா சைத்தான்..?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரூபாய் நோட்டுப் பிரச்சினையால் தள்ளித் தள்ளிப் போன சைத்தான் நேற்று ஒரு வழியாக ரிலீஸ் ஆகிவிட்டது.

வழக்கமாக வெள்ளிக்கிழமைதான் வெளியிடுவார்கள். ஆனால் நான்கு நாள் ஓபனிங்கை மனதில் வைத்து டிசம்பர் 1-ம் தேதியே வெளியிட்டனர்.


Saithan fails to fetch first day crowd

சமூக வலைத்தள புரமோஷனை நம்பி படம் பெரிய அளவில் ரீச் ஆகிவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த விஜய் ஆன்டனிக்கு ஏமாற்றம். காரணம், ஒரு பக்கம் மழை.. இன்னொரு பக்கம், இன்னமும் ஏடிஎம்மில் பணத்துக்கு அல்லாடிக் கொண்டிருக்கும் மக்கள்.


விளைவு, சென்னைக்கு வெளியே, குறிப்பாக சிங்கிள் ஸ்க்ரீன் அரங்குகளில் படத்துக்கு 25- 50 பேர்தான் படம் பார்க்க வந்திருந்தனர். சேலத்தில் ஒரு பிரபல அரங்கில் முதல் காட்சிக்கு திரண்ட கூட்டம் மொத்தமே 60 பேர்தானாம்.


Saithan fails to fetch first day crowd

கோவையின் புறநகர்ப் பகுதி, ராமநாதபுரம் போன்ற ஏரியாக்களில் சொல்லிக் கொள்ளும்படி கூட்டமே இல்லையாம்.


சென்னையில் சராசரியாக 60 சதவீத ஓபனிங்தான் இந்தப் படத்துக்கு. பார்த்த பலரும் பிச்சைக்காரனை மனதில் வைத்தே வந்திருந்ததால், சைத்தானின் மசாலாத்தனம் பிடிக்கவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்தனர்.


குறிப்பாக பெண்கள் விரும்பிப் பார்க்கும் படமாக சைத்தான் இல்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது.


Saithan fails to fetch first day crowd

"படம் வியாழன்று வெளியாகும் என்பது பலருக்கும் தெரியவில்லை. மழை வேறு. எனவேதான் கூட்டம் குறைவு. ஆனால் இன்று வெள்ளி மற்றும் நாளை சனிக்கிழமை படம் பிக்கப் ஆகிவிடும்," என்கிறது விஜய் ஆன்டனி தரப்பு. பார்க்கலாம்!

English summary
Vijay Antony's Saithan is failed to fetch enough viewers on the first day.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil