twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சைத்தான்... சிக்ஸர்னுதான் நினைச்சோம்.. ஆனா அடிச்சது டொக்கு!

    |

    -முத்து சிவா

    சென்னையில் ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில எந்த ப்ரச்சனை வந்தாலும் சால்வ் பன்னக்கூடிய , எந்நேரமும் வேலையப் பத்தியே நினைச்சிட்டு இருக்கக்கூடிய சின்சியரான வேலைக்காரர் விஜய் ஆண்டனி. மேட்ரிமோனில பாத்து ஒரு புள்ளையையும் கல்யாணம் பன்னிக்கிறாரு. கொஞ்ச நாள்ல "3" படத்துல தனுஷுக்கு வர்ற ப்ரச்சனை மாதிரி விஜய் ஆண்டனிக்கும் மண்டைக்குள்ள யாரோ பேசுற மாதிரி குரல் கேக்குது. அதுவும் பாருங்க காலகேயர்கள் பேசுற மாதிரி புரியாத பாஷையில கேக்குது.

    இந்தாளு 'உஸுமலரசே யஸூமலரசே' 'மக்கயால மக்கயாலா காய காவுவா' ன்னு புரியாத வார்த்தையெல்லாம் வச்சி ட்யூன் போடும்போதே நினைச்சேன். பின்னால இப்புடியெல்லாம் மண்டைக்குள்ள நடக்கும்னு. இப்ப நடந்துருச்சி பாருங்க. கூடிய சீக்கிரம் ஹாரிஸ் ஜெயராஜூக்கும் இதே வியாதி வரும்னு எதிர்பார்க்கலாம்.

    Saithan viewers comments

    அப்ப விஜய் ஆண்டனிய ஒரு சைக்கார்டிஸ்டுக்கிட்ட அழைச்சிட்டு போறாங்க. சைக்கார்டிஸ்டுன்னாலேதான் உடனே படுக்க வச்சி மூஞ்சில மாவு பெனைஞ்சி 'இப்ப நா உங்க ஆழ் மனசுக்கு போகப்போறேன்.... இப்ப உங்களுக்கு வயசு 15' ன்னு ஆரம்பிச்சிருவாய்ங்க. அதுவும் கொஞ்சம் கூட மாறாம அதே வசனம். இப்பல்லாம் இந்த மாதிரி ஹிப்னடைஸ் பன்ற காட்சிகள பாக்கும்போது தலைநகரம் படத்துல வடிவேலுவ மனோபாலா ஹிப்னாடைஸ் பன்றதுதான் பட்டுன்னு ஞாபகம் வருது. 'இப்ப உனக்கு பத்து வயசு. என்ன பன்னிக்கிட்டு இருந்த? நானா... ஊர்ல மாடு மேச்சிக்கிட்டு இருந்தேன்...'

    ஒருத்தன கண்ண மூடச் சொல்லி 'இப்ப இழுத்து மூச்சு விடுங்க... இப்ப அப்டியே உங்க கடந்த காலத்துக்கு போகப்போறீங்க... ஈஸி... ஈஸி' ன்னு சொல்றத மட்டும்தான் ஆதிகாலத்துலருந்து இப்ப வரைக்கும் தமிழ் படத்துல சைக்கார்டிஸ்ட் டாக்டருங்க சொல்லிக்கிட்டு இருக்காங்க. Insidious படத்துல ஒரு கிழவி ஹீரோவ ஹிப்னாடைஸ் பன்னும் பாருங்க. 'கண்ண மூடு.... இப்ப நீ ஒரு தியேட்டர்ல உக்கார்ந்துருக்க.. அந்தத் தியேட்டர்ல உன்னத்தவற யாருமே இல்ல. சுத்தி ஒரே இருட்டு... இப்ப அந்த வெள்ளை ஸ்க்ரீன் மட்டும் தான் உன்னோட கண்ணுக்கு தெரியிது. அந்த ஸ்கீரினயே உத்துப் பாரு....இன்னும் நல்லா பாரு' ன்னு சொல்லியே அவன் மைண்டுக்குள்ள போகும். அத imagine பன்னா நமக்கே மைண்டு எங்கயோ போவும்.

    ஒரு பத்து வருஷம் பின்னால போங்க.. இன்னும் பத்து வருஷம் பின்னால போங்க.. இன்னும் ஒரு பத்து வருஷம் பின்னால போங்க... (அடேய் எனக்கு மொத்தமே 27 வயசுதாண்டா ஆகுது....)

    Saithan viewers comments

    சென்னை 28 ல சொல்ற மாதிரி இதுக்கு மேல பின்னால போகனும்னா வெளில நின்னு கைதான் தட்டனும்.

    நுங்கம்பாக்கம் இண்டர்வியூக்கு போறதுக்கு டேக் டைவர்ஷன்ல ஆந்த்ராவுக்கு போற மாதிரி 27 வயசு விஜய் ஆண்டனி மைண்டுக்குள்ள, பத்து பத்து வருஷமா பின்னால போயி இதுக்கு முந்துன ஜென்மத்தோட நினைவு வர்ற அளவுக்கு மாவு பெனைஞ்சிடுறாங்க. அடப்பாவிகளா... கிணறு தோணுடுறேன் கிணறு தோண்டுறேன்னு பூமியோட அடுத்த பகுதிக்கே வந்துட்டீங்களேடா....!

    போன ஜென்மத்துல விஜய் ஆண்டனி ஒரு ஆக்‌ஷன் அன்லிமிட்டடா இருப்பாருன்னு தானே நினைக்கிறீங்க? நெவர். ரொம்ப சாஃப்ட்டான தமிழ் வாத்தியாரு... சிலப்பல ஜலபுல ஜங்க்ஸ்களால கொலை செய்யப்படுறாரு. அப்ப செத்ததுக்கு இப்ப பழி வாங்க சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் விஜய் ஆண்டனி உடம்புல வர்றாரு. அதுலருந்து அம்பி, அண்ணியன் மாதிரி அப்பப்ப போன ஜென்ம கேரக்டராவும், அப்பப்ப ரியல் கேரக்டராவும் இருக்காப்ள.

    க்ளைமாக்ஸ்ல ஒரு சீன்ல விஜய் ஆண்டனிய சங்கிலியால கட்டி வச்சிருக்கப்ப படக்குன்னு போன ஜென்ம கேரக்டரு உள்ள வருது. 'யானைப் பலமிது யாக்கையில் வர...' ந்ங்குற மாஸ் சாங்க போடுறாங்க. (அடேய் இருங்கடா... நல்லா பாருங்கடா வந்துருக்கது தமிழ் வாத்தியாருடா... அவரு ஃப்ளாஷ்பேக்குலயே யாரயும் அடிக்கல... இப்ப எதுக்குடா அவருக்கு மாஸ் சாங்கு?)

    ஒரு படத்தப் பொறுத்த அளவு அதுல இருக்க ஹீரோ எப்படிப்பட்டவர்.. அவரால அடிக்க முடியுமா இல்ல அடிக்க முடியாதா? எத்தனை பேர அடிக்கிற கெப்பாசிட்டி இருக்கு போன்ற விஷயங்களையெல்லாம் முன்னாலயே காட்டிரணும். அட்லீஸ்ட் முதல் பாதிலயாவது காட்டனும். கடைசிவரைக்கும் எதுவுமே காட்டாம க்ளைமாக்ஸ்ல பல பேர அடிக்கிறதெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படியே இருக்காது.

    படத்தோட டைட்டில் கார்டுல, "இந்தப் படத்தின் ஒரு பாதி சுஜாதாவோட நாவல தழுவியது" ன்னு போடுறாங்க. தழுவுனதுதான் தழுவுனீங்க... முழுசா தழுவிருக்கலாம்ல. ஆரம்பத்துல போட்ட முடிச்சுகள அவுக்குறதுக்கு பின்னால ரொம்ப கஷ்டப்பட்டு, தெளிவில்லாம எங்கெங்கயோ போய் முட்டிக்கிட்டாங்க.

    பூர்வ ஜென்ம கதைகள வச்சி மக்கள சுவாரஸ்யத்தோட உச்சத்துக்கே கொண்டு போக முடியும். 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தையெல்லாம் இப்ப பாத்தாலும் கொடூரமா இருக்கும். மஹாதீரா, யாவரும் நலம் படங்களெல்லாம் இந்த பூர்வ ஜென்ம கதைக் களங்கள்லதான் மாபெரும் வெற்றியடைஞ்சிது. அனேகன் படத்தோட ஒரு பகுதி கூட அப்டித்தான்.

    பூர்வ ஜென்ம ஞாபகம் அப்டிங்குறது ஒரு instinct ஆ காமிக்கப்படும்போது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். ஆனா அதுக்கே அறிவியல் சாயம் பூசி, அத செயற்கையா தூண்டுவது மாதிரி காண்பித்திருப்பது கொஞ்சமும் ஒட்டவில்லை. சுஜாதாவின் ஒரிஜினல் கதை எப்படியோ தெரியல... ஆனால் இங்கு முடிவு மஹா சொதப்பல்!

    படம் முதல்ல ரொம்ப ஸ்லோவாதான் பிக் அப் ஆகுது. கிட்டத்தட்ட இண்டர்வலுக்கு முந்தைய பிந்தைய கால் மணி நேரங்கள் நல்ல சுவாரஸ்யம். மற்றபடி ரொம்ப ஆவரேஜாதான் படம் நகருது. அநேகன் படத்துல க்ளைமாக்ஸ்ல அது உண்மையா இல்ல imagination ஆன்னு ஒரு முடிவுக்கே வர முடியாத மாதிரி ஒரு குழப்பு குழப்புவாய்ங்க. அதே குழப்பம் இங்கயும்.

    விஜய் ஆண்டனி வழக்கம்போல் அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பு. பாடல்கள் அவ்வளவு சிறப்பா இல்லை. 'யானைப் பலமிது' மட்டும் நல்லாருக்கு. மத்ததெல்லாம் ரொம்பக் கஷ்டம். ஹீரோயினா வர்ற புள்ள செம அழகா இருக்கு. குறிப்பா அதோட லிப்ஸ்டிக் கலர் சூப்பர். அந்த புள்ளைக்கு டப்பிங் வாய்ஸூம் அருமை. அந்தக் குரல எங்கயோ கேட்ட ஞாபகம். அநேகமா சதுரங்க வேட்டைல ஹீரோயினுக்கு வர்ற குரலா இருக்கலாம். படம் பாத்தவங்க அந்தக் குரல வேற எந்தப் படத்துலயாவது கேட்டிருந்தா சொல்லுங்க.

    மொத்தத்தில் முந்தைய விஜய் ஆண்டனி படங்கள் அளவுக்கு இது நம்மள இம்ப்ரஸ் பண்ணல. அதே சமயம் ரொம்ப அறுவைன்னும் சொல்ல முடியாது. சுமாரான அறுவை!

    English summary
    Here a viewers sarcastic comments on Vijay Antony's Saithan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X