»   »  இந்த வார ஸ்பெஷல்... சைத்தான், மாவீரன் கிட்டு உள்பட 4 படங்கள் ரிலீஸ்!

இந்த வார ஸ்பெஷல்... சைத்தான், மாவீரன் கிட்டு உள்பட 4 படங்கள் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த வாரம் சைத்தான், மாவீரன் கிட்டு, பழைய வண்ணாரப்பேட்டை, அழகென்ற சொல்லுக்கு அமுதா மற்றும் ஒரு ஹாலிவுட் படம் ரிலீசாகி உள்ளது.

அழகென்ற சொல்லுக்கு அமுதா

அழகென்ற சொல்லுக்கு அமுதா

புதுமுகங்கள் அர்ஷிதா, ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள அழகென்ற சொல்லுக்கு அமுதா படத்தை நாகராஜன் என்பவர் இயக்கியுள்ளார். ரபேல் சல்தானியா தயாரித்துள்ளார். எல்லாமே புதுமுகங்கள் என்றாலும், நகைச்சுவைக்கு கேரண்டி என்பதால் இந்த வார ரிலீசில் முக்கியத்துவம் பெறுகிறது இந்தப் படம்.

மாவீரன் கிட்டு

மாவீரன் கிட்டு

இயக்குநர் சுசீந்திரன் கொஞ்சம் துணிந்து கையில் எடுத்திருக்கும் கதை இது. விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார். கணிசமான அரங்குகளும் கிடைத்துள்ளன.

சைத்தான்

சைத்தான்

விஜய் ஆன்டனி, அருந்ததி நாயர் நடித்துள்ள சைத்தான் படத்தை விஜய் ஆன்டனி மனைவி பாத்திமாதான் தயாரித்துள்ளார். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். சுஜாதாவின் ஆ நாவலை மையமாக வைத்து எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் சுஜாதா கதையில் இருந்த விறுவிறுப்பு படத்தில் மிஸ்ஸிங்.

பழைய வண்ணாரப்பேட்டை

பழைய வண்ணாரப்பேட்டை

சென்னையில் நடந்த உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட படம் என்ற அறிப்போடு வெளியாகியுள்ள பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் பிரஜன் நாயகனாகவும், அஷ்மிதா நாயகியாகவும் நடித்துள்ளனர். மோகன் ஜி இயக்கியுள்ளார்.

அண்டர்வேர்ல்ட் 5

அண்டர்வேர்ல்ட் 5

அன்னா ஃபோஸ்டர் இயக்கியுள்ள அண்டர்வேர்ல்ட் 5 ப்ளட் வார்ஸ் தமிழில் அச்சுறுத்தும் பாதாள உலகம் என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

அவ்ளோதான்!

English summary
Today there are 4 straight Tamil movies are releasing world wide including Maaveeran Kittu and Saithan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil