»   »  சைத்தான் விமர்சனம்

சைத்தான் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

-எஸ் ஷங்கர்

Rating:
2.0/5

நடிகர்கள்: விஜய் ஆன்டனி, அருந்ததி நாயர்

இசை: விஜய் ஆன்டனி


தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆன்டனி


இயக்கம்: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி


முன்ஜென்ம கதை. அமரர் சுஜாதாவின் 'ஆ' நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என்றெல்லாம் வந்த செய்திகள் சைத்தானுக்கு ஒரு வித எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியது என்னமோ உண்மைதான்.


எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றியதா சைத்தான்?


சாப்ட்வேர் எஞ்ஜினீயர் விஜய் ஆன்டனிக்கும் அருந்ததி நாயருக்கும் திருமணமாகி, வாழ்க்கை சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில், விஜய் ஆன்டனி மண்டைக்குள் அடிக்கடி ஒரு குரல். அந்தக் குரல் அவரை திரும்பத் திரும்ப தற்கொலைக்குத் தூண்டுகிறது. நண்பர்களால் பிழைக்கிறார். இந்தக் குரலைப் பற்றி தன் மேலதிகாரியிடம் கூற, அவர் மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்துப் போகிறார்.


Saithan Review

ஹிப்னாடிஸம் பண்ணி விஜய் ஆன்டனியின் பூர்வஜென்மத்துக்கே போகிறார்கள். அந்த மர்மக் குரல் ஜெயலட்சுமி என்பவரைத் தேடச் சொல்கிறது. யார் அந்த ஜெயலட்சுமி? எதற்காக அவரைத் தேடுகிறார்கள்? ஜெயலட்சுமி கிடைத்தாரா? என்பதெல்லாம் மீதி.


படம் முழுக்க விஜய் ஆன்டனியையே காட்டிக் கொண்டிருப்பது கொஞ்சமல்ல, ரொம்பவே சலிப்புத் தட்டுகிறது. கொஞ்சம் மற்றவர்களையும் நடிக்க விடுங்க பாஸ்!


சுஜாதாவின் ஆ கதை எழுதப்பட்ட விதம், ஒவ்வொரு அத்தியாயத்தையும் அவர் முடித்த ஸ்டைல் செம்மையாக இருக்கும். அதை அப்படியே திரைக்கதைப்படுத்தியிருந்தால் இந்தப் படம் வேற லெவல். ஆனால் பின்பாதியில் சொந்தச் சரக்கு சேர்க்கிறோம் என்ற பெயரில் சொதப்பிவிட்டார்கள்.


சாப்ட்வேர் எஞ்ஜினீயர், சாஃப்ட் தமிழ் ஆசிரியர் என இரண்டு வேடங்களில் விஜய் ஆன்டனி. வேடமெல்லாம் ஓகே.. ஆனால் இவ்வளவு மென்மையான ஆசாமி, கடைசியில் மசாலாப்பட ஹீரோக்கள் மாதிரி எதிரிகளைக் காற்றில் பறக்க விட்டு அடிப்பதைப் பார்த்து தியேட்டர் சிரிக்கிறது. காதல் காட்சிகள் விஜய் ஆன்டனிக்கு இன்னும் ஆசிட் டெஸ்ட் மாதிரிதான் உள்ளன.


அருந்ததி நாயர் அழகு. ஆனால் அவரது பாத்திரப்படைப்பில் செம குழப்பம்.


Saithan Review

முருகதாஸ் பாத்திரம் சின்னச் சின்ன வசனங்களில் சிரிக்க வைத்தாலும், அவர் பாத்திரத்தை இன்னும் கவனமாகச் செதுக்கியிருக்கலாம்.


காமெடியன் இல்லாத குறையைத் தீர்க்கிற மாதிரி ஒரு கேரக்டர் வில்லனுக்கு!


பின்னணி இசையில் மிரட்டி இருக்கும் விஜய் ஆன்டனி, ஒரு பாடலில் மட்டும் ஜெயித்திருக்கிறார். மற்ற பாடல்கள் நான்கைந்து இன்டர்வெல்லுக்கு சமம்.


பிரதீப் கலிபுராத்தின் ஒளிப்பதிவு கச்சிதம்.


Saithan Review

முதல்பாதி சுவாரஸ்யமாக இருந்தாலும், ரசிகர்கள் மனசில் நிற்கவேண்டிய இரண்டாம்பாதி சவசவ வென கடந்து போவதால், படம் குறித்து எந்த அபிப்பிராயமும் இல்லாமல் வெளியில் வரவேண்டியிருக்கிறது.

English summary
Oneindia Tamil's Review of Vijay Antony's Saithan movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil