சைவம் 2014-ம் ஆண்டின் எதார்த்தமான திரைப்படம். இப்படத்தை எழுதி இய்யக்கியுள்ளார் ஏ எல் விஜய். இப்படத்தில் நாசர் மற்றும் குழந்தை நட்சத்திரம் சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கதை
கதிரேசன் (நாசர்) குடும்ப தலைவர். அவரின் மகன்கள் மற்றும் மகள் குடும்பதினர் திருவிழாவிற்கு வருகின்றனர். அவர்கள் வீட்டில் பாப்பா என்று பெயரிடப்பட்ட சேவல் இருந்தது. அசேவலை தமிழ் (சாரா) வளர்த்து வந்தார். வரவிருக்கும் திருவிழாவிற்கு அசேவலை கோவிலுக்கு தருவதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். அசேவலை காப்பாற்ற தமிழ் எவ்வாறு முயற்சிக்கின்றார்? இறுதியில் சேவலுக்கு என்ன ஆனது? அனைவரும் அசைவத்திலிருந்து சைவத்திற்கு எவ்வாறு மாற்றினர்? என்பதை நகைச்சுவை கலந்த எதார்த்தமான போக்கில் கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர்.