X
சர்வம் தாளமயம்
Drama | 01 Feb 2019 | U | 131 Mins
Tamil

சர்வம் தாளமயம் கதை

சர்வம் தாளமயம் இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், அபர்ணா பாலமுரளி, சீனு மோகன் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம். மேலும் இப்படத்தினை தயாரிப்பாளர் லதா மேனன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

டிசம்பர் 28ஆம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட சர்வம் தாளமயம் காரணமின்றி வெளிவராததால், தற்போது பிப்ரவரி 1 முதல் இப்படத்தினை எதிர்பாக்கலாம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

கதைச்சுருக்கம் 

கர்நாடக சங்கீதம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கானது மட்டும் தானா என்ற கேள்வியை முன்வைத்து, அதற்கு விடையும் சொல்கிறது சர்வம் தாளமயம்.

கதை 

மிருதங்கம் செய்து விற்கும் ஏழை தொழிலாளி ஜான்சன் (குமரவேல்), சூப்புக்கடை நடத்தும் தெரசா தம்பதியின் மகன் பீட்டர் (ஜி.வி.பிரகாஷ்). கல்லூரி படிக்கும் பீட்டர் ஒரு தீவிர விஜய் ரசிகன். இதன் காரணமாகவே அவனது படிப்பு தடைபடுகிறது. இதற்கிடையே நர்ஸாக வேலைபார்க்கும் சாரா (அபர்ணா முரளி) மீது காதல் கொள்கிறார். பீட்டருக்கு இயல்பாகவே நன்றாக மேளம் வாசிக்க வருகிறது.

சங்கீதம் என்பது சபா கச்சேரிகளுக்கு மட்டுமே உரித்தானது என்ற கொள்ளையுடன் விளங்கும் மிருதங்க சக்ரவர்த்தி பாலக்காடு வேம்பு ஐயரின் (நெடுமுடி வேணு) ஒரு கச்சேரியை யதேச்சையாக கேட்கிறான் பீட்டர். அதன் பிறகு மிருதங்கம் மீது அவனுக்கு தீராக்காதல் ஏற்படுகிறது. ஆனால் அவன் பிறந்த சமூகத்தின் காரணமாக, அவனது ஆசை நிராகரிக்கப்படுகிறது. மிருதங்கம் மீதான பீட்டரின் காதல் வென்றதா என்பதை ஒரு இசை திருவிழாவாக சொல்கிறது சர்வம் தாளமயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+