சீறு இயக்குனர் ரத்தன சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன், வருண் நடித்துள்ள அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இம்மான் இசையமைத்துள்ளார்.
அதிரடி மற்றும் குடும்பப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் லாரென்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்துள்ளார்.
சீறு படத்தினை பற்றிய தகவல்கள்
இப்படத்தின் நாயகி ரியா சுமன் மாடலிங் துறையில் பணியாற்றி பிரபலமானவர். 2016ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், இப்படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமாகிறார்.
சீறு படத்தின் இயக்குனர் ரத்தின சிவா தமிழில் றெக்க படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர், பின்னர் அருண் விஜயின் வா டீல் படத்தினை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே சீறு படம் வெளியாகியுள்ளது.
சீறு படத்தில் முதலில் சிலம்பரசன் முன்னணி நடிகனாக நடிக்க உறுதி செய்யப்பட்டது படக்குழு, பின்னர் சிலம்பரசனின் கால்ஷீட் காரணமாக இப்படத்திற்கு ஜீவாவை உறுதி செய்துள்ளனர் படக்குழுவினர். இப்படத்தின் படப்பிடிப்பை 2018 டிசம்பர் மாதம் தொடங்கியுள்ள படக்குழு, சீறு என்னும் தலைப்பில் அதிகாரப்பூர்வமாக ஜனவரி 2019ல் இப்படத்தினை பற்றிய தகவலை இணையத்தில் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
சீறு படத்தின் கதை
ஜீவா (மணிமாறன்) சொந்த ஊரில் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றினை நிறுவி பணியாற்றி வருபவர். இவர் தனது தங்கையுடன் ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார். இவரின் தங்கை கர்ப்பமாக இருப்பதால் அவளையும் கவனித்துக்கொண்டு தொலைக்காட்சி பணிகளையும் செய்து வரும் இவர், சில காரணங்களால் அந்த ஊர் அரசியல்வாதிகளை பகைக்கிறார். இதனால் சில பிரச்சனைகளில் சிக்குகிறார் ஜீவா.
ஜீவா-வை கொலை செய்வதற்கு பல கொலைகளை செய்யும் ஒரு கொடூரமான ரௌடியாக வருண் நடித்துள்ளார். இவர் ஜீவா-வை கொலை செய்ய வரும் நேரத்தில் ஜீவாவின் தங்கை கர்ப்பவலியில் துடிக்கிறார். இதனை அறிந்த வருண் ஜீவாவின் தங்கையான காயத்திரி கிருஷ்ணனை காப்பாற்றுகிறார். தனது தங்கையை காப்பாற்றிய வருணுக்கு நன்றி சொல்ல துடிக்கும் ஜீவா, வருண் உயிருக்கும் சிலரால் ஆபத்து இருக்கிறதை அறிந்து அவரை காப்பாற்ற போராடுவதே இப்படத்தின் மீதிக்கதை.
ஏன் வருண் ஜீவாவை கொலை செய்ய வந்தார்? வருணுக்கு உள்ள அந்த ஆபத்து என்ன? என்பதனை சுவாரஸ்ய திரைக்கதை மற்றும் அதிரடி காட்சிகள் உள்ள படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ரத்தின சிவா.