செய் கதை

    செய் இயக்குனர் ராஜ் பாபு இயக்கத்தில், நகுல், அஞ்சால் முஞ்சல், நாசர் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் காதல் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை பற்றிய மற்ற அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும்.

    கதை :

    படத்தின் துவக்கத்தில் மனநலக் காப்பகம் ஒன்று தீவிபத்துக்கு உள்ளாகிறது. இதற்கு காரணம் அமைச்சராக இருக்கும் தலைவாசல் விஜய் தான் என எதிர்க்கட்சிகளும், சொந்த கட்சியும் குற்றஞ்சாட்டுகிறது. இதனால் பதவியை துறக்கிறார் தலைவாசல் விஜய். தான் நிரபராதி என்பதற்கான ஆதாரங்களை சேகரிக்கும் அவரை மர்ம கும்பல் கொல்கிறது.

    இதற்கிடையே, பொறுப்பில்லாமல் ஊரை ஏமாற்றி சுற்றி திரியும் நகுலுக்கு சினிமா ஸ்டாராக வேண்டும் என்பது ஆசை. இவரை தனது கதைக்காக பின் தொடர்கிறார் பெண் இயக்குனர் ஆஞ்சல். ஒரு கட்டத்தில் ஆஞ்சல் மேல் நகுலுக்கு காதல் மலர, அவரது சொல்படி வேலைக்கு செல்கிறார். ஆனால் அந்த வேலையே அவரது உயிருக்கு ஆபத்தாக மாறுகிறது. அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார், அமைச்சரை கொன்ற அந்த மர்ம கும்பல் யார் என்பதற்கான விடையே படத்தின் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie செய் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).