செய்

  செய்

  Release Date : 23 Nov 2018
  2/5
  Critics Rating
  Audience Review
  செய் இயக்குனர் ராஜ் பாபு இயக்கத்தில், நகுல், அஞ்சால் முஞ்சல், நாசர் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் காதல் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை பற்றிய மற்ற அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும்.

  கதை :

  படத்தின் துவக்கத்தில் மனநலக் காப்பகம் ஒன்று தீவிபத்துக்கு உள்ளாகிறது. இதற்கு காரணம் அமைச்சராக இருக்கும் தலைவாசல் விஜய் தான் என எதிர்க்கட்சிகளும், சொந்த கட்சியும் குற்றஞ்சாட்டுகிறது. இதனால் பதவியை துறக்கிறார் தலைவாசல் விஜய். தான் நிரபராதி என்பதற்கான ஆதாரங்களை சேகரிக்கும் அவரை மர்ம கும்பல்...
  • ராஜ் பாபு
   Director
  • tamil.filmibeat.com
   2/5
   நீண்ட நாட்களுக்கு பிறகு நகுல் நடித்திருக்கம் படம். ஓப்பனிங் சாங், ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி என தனது வழக்கமான கமர்சியல் பாணியில் பயணித்திருக்கிறார். ஓப்பனிங் பாடலில் சூப்பராக டான்ஸ் ஆடியிருக்கிறார். உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மெனக்கெட்டிருக்கிறார்.

   புதுமுகம் ஆஞ்சலுக்கு இந்த படத்தில் பெரிதாக வேலை ஏதும் இல்லை என்றாலும், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். மற்றொரு நாயகியான அஞ்சலி ராவ்வும் தனது கடமையை சரியாக செய்திருக்கிறார்.

   மனித உறுப்புகள் திருட்டை மையமாக வைத்து ஏற்கனவே நிறைய படங்கள் வந்துவிட்ட நிலையில், அதே கதைக்கருவை வைத்துக்கொண்டு வித்தியாசமான திரைக்கதை மூலம் செய் திரைப்படத்தை தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராஜ்பாபு. படத்தின் ஆரம்ப காட்சிகள் பார்வையாளர்களை படத்துக்குள் ஈர்க்கின்றன. குறிப்பாக இடைவேளை பிளாக் சுவாரஸ்யத்தை தூண்ட..