twitter

    சர்வர் சுந்தரம் கதை

    சர்வர் சுந்தரம் இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனமான கென்யா பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜே செல்வகுமார் தயாரிப்பில் நடிகர் சந்தானம் மற்றும் வைபவி சாண்டில்ய முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    அதிரடி மற்றும் நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர் மதி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார்.
     
     
    சர்வர் சுந்தரம் படத்தின் பிரத்யேக தகவல்கள்

    தமிழ் திரைப்பட முன்னணி நகைச்சுவை ஜாம்பவானான நாகேஷ் அவர்களின் முதல் முன்னணி கதாபாத்திரத்தில் உருவான "சர்வர் சுந்தரம்" தலைப்பை இப்படத்திற்கு பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் பிஜேஸ் நாகேஷ் இரண்டாம் நாயகனாக நடித்திருக்கிறார்.

    பிஜேஸ் இந்த படத்தில் கிராமத்தில் சிறந்த அளவில் சமைக்க தெரிந்த ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். அவர் சென்னைக்கு வந்து படித்து சமையலில் பெரிய ஆளாக ஆக வேண்டும் என எண்ணி சமையளுக்கு படிக்கிறார். படத்தில் சந்தானம் மற்றும் அடிதாங்கி வினோத் தான் காமெடி காட்சிகள் அனைத்தையும் நிரப்பி இருப்பதாகவும் இயக்குனர் ஆனந்த் பால்கி கூறியுள்ளார்.

    இயல்பில் பிஜேஸ் நாகேஷ் எழுத்தாளர், அவர் எழுத்தில் பிஸியாக இருக்கும் போது தான் சர்வர் சுந்தரம் படத்தில் நடிக்க கூப்பிட்டு இருந்தார் பால்கி. பிஜேஸின் இயல்பு நாகேஷை ஞாபகபடுத்துவாதக இருந்ததால் எந்த வித நிபந்தனையும் இன்றி படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கபட்டு இருக்கிறார் பிஜேஸ் .

    முதலில் தயங்கிய பிஜேஸ் படத்தின் தலைப்பு கேட்டதும் இது நம்ம தாத்தா நாகேஷே நடிக்க சொன்னது போல ஒரு உணர்வு இருந்தது அதனால் கட்டாயம் நடிக்கலாம் என எண்ணி இந்த படத்தில் நடித்தேன் என சமீபத்தில் கூறியிருந்தார். இந்த படத்தில் இயக்குனர் ஆனந்த் பால்கி நல்ல முறையில் பிஜேஸை பார்த்து கொண்டாராம். 

    பிஜேஸ்க்கு எந்த இடையூரும் இன்றி படப்பிடிப்பின் போது எந்த தொல்லையும் இல்லாமல் என்னை நன்றாக இயக்குனர் பார்த்து கொண்டார் என பிஜேஸ் கூறியிருந்தார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு தான் பதட்டம் இருந்தது ஏனெனில் நாகேஷின் பேரன் என்பதால் எதிர்பார்ப்புகள் இருக்கும் அதனை எவ்வாறு பூர்த்தி செய்வோமா எப்படி என்ற பதட்டம் தனக்கு படப்பிடிப்பின் போது இருந்ததாக பிஜேஸ் கூறியிருந்தார்.

    சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் மற்றும் பிரச்சனைகள்

    டிசம்பர் 2015ல் அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாக்கப்பட்ட இப்படம், அக்டோபர் 2016ல் நிறைவடைந்தது.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2016 ஜனவரி 20ல் நடிகர் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.

    இப்படத்தின் தயாரிப்பாளர் நிதி பிரச்சனை காரணமாக இப்படத்தினை நிலுவையில் வைத்து வெளியிட்டு தேதிகளை மாற்றி உள்ளார். பின்னர் 2 ஆண்டுகள் கழித்து 2020 ஜனவரி 31ல் சர்வர் சுந்தரம் திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்ட நிலையில், அதே தேதியில் சந்தனத்தின் டகால்டி திரைப்படம் வெளியானதால் பல பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இப்படம் 2020 பிப்ரவரி 21-ற்கு தள்ளிச்சென்றது.

    பின் தியேட்டர் பணி நிறுத்தம் போன்ற பல பிரச்சனைகள் காரணமாக கிடப்பில் இருந்த இத்திரைப்படம், தற்போது 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என படக்குழு சார்பில் செய்திகள் வெளியாகிறது.
    **Note:Hey! Would you like to share the story of the movie சர்வர் சுந்தரம் with us? Please send it to us ([email protected]).