சைலன்ஸ் இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி, மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே என தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் டி ஜி விஷ்வா பிரசாத் மற்றும் கோண வெங்கட் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் க்ரிஷ் மற்றும் கோபி சுந்தர் இசையமைத்துள்ளனர்.
சுவாரஸ்யமான திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஷனில் டீயோ மற்றும் படத்தொகுப்பாளர் பிரவின் புடி எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தினை பிபில் மீடியா ஃபேக்டரி மற்றும் கோண பிலிம் காப்ரேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
ரிலீஸ்
2020-ஆம் ஆண்டு ஜனவரி 31ல் திரையரங்குகளில் வெளியாகவிருந்த இத்திரைப்படம், சில காரணங்களால் 2020 ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிச் சென்றது. பின் கொரோன காரணங்களால் தமிழக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் இப்படம் 2020 அக்டோபர் 2ல் இணையதள ஓ.டி.டி பக்கமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
அமேசான் நிறுவனம் தனது 'அமேசான் பிரைம் வீடியோ' ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இப்படத்தினை வெளியிடுகிறது.
சைலன்ஸ் படத்தின் பிரத்யேக தகவல்கள்
2019-ஆம் ஆண்டின் மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு நிஷப்தம் என்ற தலைப்பில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 2019-ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிட்டது. பின்னர் சில காரணங்களால் இப்படத்தின் தலைப்பை சைலன்ஸ் என மாற்றி தமிழில் வெளியிடுகின்றனர்.
முதலில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் பின்னர் ஹிந்தி மொழியிலும் உருவாக்கப்பட்டது. பின் அமேசான் நிறுவனம் மலையாள மொழியில் இப்படத்தினை டப்பிங் செய்து 2020 அக்டோபர் 2ல் வெளியிடுகிறது.
சைலன்ஸ் படத்தின் கதை
பேய் பங்களா ஒன்றுக்கு வருங்கால கணவருடன் செல்லும் காதலிக்கு நேரும் பிரச்னைகளும் அவரைச் சுற்றி நடக்கும் திக் திடுக் சம்பவங்களும்தான், சைலன்ஸ்!
அமெரிக்காவின் பிரபலமான இசைக்கலைஞன் ஆண்டனி. அனாதை இல்லத்தில் வளர்ந்த காதுகேளாத, வாய்பேச முடியாத ஓவியர் சாக்ஷி. திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கின்றனர். இடையில் சாக்ஷின் உயிர்தோழி மாயமாகிறார். கவலையில் இருக்கும் சாக்ஷியை வெளியே அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார், ஆண்டனி. சாக்ஷிக்கு பழங்கால ஓவியம் ஒன்றை வரைய ஆசை.
அது பேய் பங்களா என்று சொல்லப்படும் இடத்தில் இருக்கிறது. அதை எடுக்க போகிறார்கள். அங்கு ஓர் அறையில் கணவர் கொல்லப்பட, தப்பி வருகிறார் சாக்ஷி. அங்கு என்ன நடந்தது, ஏன், எதற்கு என்பதுதான் கதை.