X
சினம்
Action | Drama | Thriller | 16 Sep 2022 | U/A | 115 Mins
Tamil

சினம் கதை

சினம் இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய், பாலக் லால்வானி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர் விஜய்குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஷபீர் இசையமைத்துள்ளார்.

அதிரடி & திரில்லர் திரைக்கதையில் தமிழ் ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எஸ் கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ராஜா முகமத் எடிட்டிங் செய்துள்ளார்.

சினம் படத்திற்கு தமிழக தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் 2022, செப்டம்பர் 16ல் வெளியாகியுள்ளது.




சினம் திரைப்படத்தின் கதை

நேர்மையான அதிகாரியாக காவல் துறையில் பணியாற்றும் நாயகன் அருண் விஜய், ஒரு கொலை வழக்கினை விசாரித்து வருகிறார். அதற்கு இடையூறாக இவரின் மேல் அதிகாரி இருக்க, ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து அவரை அடித்து விடுகிறார். பின் என்ன ஆனது என்பதே திரைப்படத்தின் கதை.

சினம் திரைப்படத்தின் கதை

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளனர், அருண் விஜய் - பலக் லால்வானி. இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. அருண் விஜய் நேர்மையான காவல் அதிகாரி. அதனாலே இவருக்கும் காவல் துறையினருக்கும் இடையே பல மோதல்கள் உள்ளது.

பலக் லால்வானி, அருண் விஜய்யை சந்திக்க ஒரு இடத்திற்கு வருகிறார். மனைவி வருவதற்கு தாமதமாகிறது, அருண் விஜய் நீண்ட நேரமாக அதே இடத்தில் மனைவிக்காக காத்திருக்கிறார். அச்சமயம் ஒரு இடத்தில் கணவன் - மனைவி கொலை செய்யப்பட்டுள்ளனர், என்ற தகவல்கள் அருண் விஜய்க்கு வருகிறது.

அருண் விஜய் அங்கு சென்று பார்த்தால், தன் மனைவி வேறொருவருடன் கொலை செய்யப்பட்டு பிணமாக உள்ளார். ஷேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ள அருண் விஜய் மனைவி பல்லக் லால்வானி, 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்படுகிறார். 

இந்த தகவல்களை வைத்து அருண் விஜய்யின் உயரதிகாரிகள் இவரை களங்கப்படுத்துகிறார்கள். இவர் மனைவியை அவதூறாக பேசியதற்கு அருண் விஜய் உயர் அதிகாரியை தாக்குகிறார். இதனால் இவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார், மீண்டும் பணிக்கு திரும்பும் அருண் விஜய் தன்னுடைய மனைவியின் கொலைக்கு காரணமானவர்களை கண்டு பிடிக்கிறாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

சினம் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்

நடிகர் அருண் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சினம் திரைப்படம், தமிழ் சினிமாவில் இவர் நடிக்கும் 33வது திரைப்படமாகும். இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக 2019ஆன் ஆண்டு நவம்பர் மாதம் 6ல் இணையத்தில் சினம் பட படக்குழு சார்பில் வெளியிடப்பட்டது.

கொரோனா நோய் பரவல் காரணத்தால் இப்படத்தினை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்து இதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடங்கியுள்ளனர். ஆனால் இப்படத்தின் நாயகன் அருண் விஜய் சினம் படத்தினை தியேட்டரில் வெளியிட வற்புறுத்தி இப்படத்தினை 2022 செப்டம்பர் 16ல் நேரடியாக திரையரங்குகளில் வெளியிட்டுள்ளார்.

குற்றம் 23, தமிழ் ராக்கர்ஸ், மாஃபியா படங்களை தொடர்ந்து சினம் படத்தில் நடிகர் அருண் விஜய் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை நடிகர் அருண் விஜயின் தந்தையும் தமிழ் திரைப்பட நடிகருமான திரு. ஆர் விஜயகுமார் தயாரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+