சிங்கப்பூர் சலூன் - இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், லால் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தனது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளார்.
நகைச்சுவை திரைக்கதையில் தமிழ் சினிமா ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எம் சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் செல்வா ஆர் கே எடிட்டிங் செய்துள்ளார்.
2024 ஜனவரி மாதம் 26ல் குடியரசு தின சிறப்பு படமாக தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளது.
சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் கதை
ஒரு படித்த பட்டதாரி தனக்கு பிடித்த சலூன் வேலையை செய்ய, பிரமாண்டமாக ஒரு சலூன் கடை வைக்கிறார், இதனால் இவர் சந்தித்த பிரச்சனைகள் தான் சிங்கப்பூர் சலூன் படத்தின் கதைக்கரு.
கதை
ஆர்.ஜே. பாலாஜி தன் ஊரில் முடிதிருத்தும் சாச்சாவை(லால்) பார்த்து இன்ஸ்பையர் ஆகிறார். ஒரு நாள் நானும் சாச்சாவை போன்று முடிதிருத்துபவர் ஆக வேண்டும் என்பதே கதிரின் கனவு. இன்ஜினியரிங் படித்திருக்கும் கதிர், பல தடைகளை தாண்டி சென்னையில் சிங்கப்பூர் சலூன் என்ற பெயரில் கடை ஒன்றை திறக்கிறார். இந்த கடையை லோகேஷ் கனகராஜ் திறந்து வைக்கிறார்.
இதில் ஜான் விஜய் வில்லன் கேரக்டரில் நடித்து இருக்கிறார். இவரும் சலூன் கடை வைத்து இருப்பதால், தனக்கு போட்டியாக கடையை திறந்த ஆர்ஜே பாலாஜிக்கு பலவிதத்தில் பிரச்சனையை கொடுக்கிறார். சலூன் கடை வைத்தால் ஏழையாத்தான் இருக்கணுமா என்ற கான்செப்டையும், முடிவெட்டுவது ஒன்றும் நகம் வெட்டும் வேலை இல்லை அது ஒரு கலை என்ற கருத்தையும் படத்தில் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் கோகுல். இறுதியில், கதிர் வெற்றி பெற்றாரா? இல்லையா என்பதுதான் இப்படத்தின் மீதி கதை.