Tamil » Movies » Sivapu Manjal Pachai » Story

சிவப்பு மஞ்சள் பச்சை

(2019)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

06 Sep 2019
கதை
சிவப்பு மஞ்சள் பச்சை இயக்குனர் சசி இயக்கத்தில் சித்தார்த் மற்றும் ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ரமேஷ் பி பிள்ளை தயாரிக்க, இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார்.

 

இத்திரைப்படத்தை பற்றி வெளியாகிய தகவல்கள்

இத்திரைப்படத்தினை இயக்குனர் சசி, அக்கா – தம்பி உறவை மையமாக்கி திரைக்கதை அமைத்துள்ளார். இந்த உறவை புதிய கோணத்தில் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாக்கியுள்ளார்.

அக்கா கதாபாத்திரத்தில் மலையாள திரையுலகின் முன்னனி நடிகையான லிஜோமோள் ஜோஸ் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இவர் இப்படத்தில் ஜி வி பிரகாஷின் அக்கா மற்றும் சித்தார்த்தின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தின் மூலம் காவலர் ( டிராபிக் இன்ஸ்பெக்டர் ) ஆக சித்தார்த் நடிக்க, இன்றைய சமுதாயத்தில் வாழும் இளைஞர்களின் பிரதிபலிப்பாக பைக் ரேசராக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.மேலும் இப்படத்தில் காஷ்மீரா (தமிழில் அறிமுகம்), மதுசூதனன், நக்கலைட் யூடுயுப் குழுவின் நடிகர்கள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கதை

சிறுவயதில் பெற்றோர்களை இழந்த ஜிவி மற்றும் அவரது அக்கா லிஜோமோள் தனித்து யார் உதவியும் இன்றி சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள். பைக் ரேஸ்-ல் அதிக விருப்பம் உள்ள ஜி வி அடிக்கடி ரேஸ் ஓட்ட செல்வார். மறுபுறம் காவல் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையில் காவல் அதிகாரியாகி மக்களுக்கு நேர்மையாக பணியாற்ற துடிக்கும் சித்தார்த். காவலர்களின் அலட்சியத்தை எதிர்த்து நேர்மையாக பணியாற்றி வருகிறார். இதனால் இவருக்கும் சில காவலர்களுக்கும் முரண்பாடாக உள்ளது.

ஒரு நாள் பைக் ரேஸ்-ல் இருக்கும் ஜி.வி எதிர்பாராத விதமாக சிதர்த்தியிடம் சிக்குகிறார், இதனால் சித்தார்த் பொது மக்கள் மத்தியில் ஜி வி -யை அவுமான படுத்த, சித்தார்த்-யை எப்படியாவது பழிவாங்க துடிக்கிறார் ஜி.வி.

ஜி.வி-க்கு மனம் முழுக்க கோபமும் வன்மம் நிறைந்திருக்கும் வேளையில் அவர் அக்காவிற்கு மாப்பிள்ளையாக சித்தார்த் வர, இருவருக்கும் பிரச்சனை ஆர்ம்பிக்கிறது. இதில் ஜீவியின் அக்கா பாதிக்கப்பட, மாமன் மச்சான் சண்டை உச்சம் தொடுகிறது. இன்னொரு புறம் ஜிவிக்கு பைக் ரேஸால் பிரச்சினையும், சித்தார்த்துக்கு தன் வேலையில் பிரச்சினையும் வருகின்றன. இந்தப் பிரச்சனைகள் கடந்து இந்த உறவுச் சிக்கல் என்னவாகிறது என்பதே கதை.
 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more