ஸ்டார் - இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின், அதிதி போஹங்கர், லால், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன் என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து ரைஸ் ஈஸ்ட் என்டர்டைன்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
எமோஷனல் மற்றும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எழில் அரசு கே ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார்.
ஸ்டார் திரைப்படம் 2024 மே 10ல் உலகமெங்கும் வெளியாகி உள்ள நிலையில், இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.
ஸ்டார் திரைப்படத்தின் கதை
கவின் (கலை) சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக வளர்கிறார். இவருக்கு பக்கபலமாக இவரது தந்தை ஆதரிக்கிறார். கவின் பெரியவனாகி சினிமாவில் நடிக்கும் வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு அதற்காக உழைத்து வருகிறார். தான் சந்திக்கும் தடைகளை உடைத்து அவர் சினிமாவில் நடிகராக ஜொலித்தார் இல்லையா என்பதே இப்படத்தின் கதைக்கரு.
ஸ்டார் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்
ஸ்டார் திரைப்படத்தின் இயக்குனரான இளன் 2018 ஆம் ஆண்டு பியார் பிரேமா காதல் படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர். பின்னர் 2019 ஆம் ஆண்டு முதல் பட நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் மீண்டும் பயணிக்க போவதாக அறிவிப்புகள் வெளியாகின. ஸ்டார் படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், பின்னர் சில காரணங்களால் ஹரிஷ் கல்யாண் இப்படத்தில் இருந்து வெளியேற நடிகர் கவின் இப்படத்தின் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். டாடா பட வெற்றியின் மூலம் நடிகர் கவின் திரைப்பயணத்தில் பல வாய்ப்புகள் வந்துள்ளது, அதில் ஒன்றுதான் ஸ்டார் திரைப்படம்.
ஸ்டார் படத்தின் டிரைலர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இப்படத்தின் டிரைலர் ஸ்டார் படத்தின் எதிரிபார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எகிற வைத்துள்ளது.
இப்படத்தில் நாயகியாக 2017 ஆம் ஆண்டு வெளியான ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தில் நடித்த அதிதி போஹங்கர் 6 ஆண்டுகள் கழித்து இப்படத்தில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்துள்ளார். ஸ்டார் திரைப்படத்தின் படப்பிடிப்பு 2023 ஜூன் மாதம் தொடங்கி 2014 ஜனவரி மாதம் முழுமை பெற்றுள்ளது.