சூரியபுத்ர மகாவீர் கர்ணா இயக்குனர் ஆர்.எஸ். விமல் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மற்றும் ஹிந்தி மொழியில் உருவாகும் பான் இந்தியா திரைப்படம். இப்படமானது இந்தியாவில் அனைவராலும் போற்றப்படும் பிரபல காவியமான 'மஹாபாரத' கதையில் உள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படமாகும். இப்படத்தில் நாயகனாக விக்ரம் நடித்துள்ளார்.
கர்ணன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருக்கும் இப்படம், 'மஹாவீர் கர்ணன்' என அறிவித்து படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், தற்போது இப்படம் 'சூரியபுத்ர மகாவீர் கர்ணா' என தலைப்பு மாற்றப்பட்டு 2021 பிப்ரவரி 23ல் இப்படத்தின் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியானது.