ஸ்வீட்ஹார்ட் - ஸ்வைத் எஸ். சுகுமார் எழுதி இயக்கிய காதல் நகைச்சுவைத் திரைப்படம். இதில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரெஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலேஸ்வரன்.பி.ஏ, மற்றும் ஃபௌசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார், அவரே இசையமைத்துள்ளார். பாலாஜி சுப்பிரமணியம் படத்தின் ஒளிப்பதிவை செய்துள்ளார், எடிட்டிங் தமிழ் அரசன் செய்துள்ளார்.
கதை
வாசு, ஒரு திறமையான அனிமேட்டர், அவர் மனு என்ற பெண்ணை காதலித்து வருகின்றார். இவர்களது காதல் கதை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக மனு கர்ப்பமாகிவிட்டார். குடும்ப சூழ்நிலை, பொறுப்புகள், காதல், பணப் பிரச்சனை இதற்கு மத்தியில் மாற்றி தவிக்கும் வாசு இதிலிருந்து வெளிவந்தாரா. இந்தப் பிரச்சினையை தாண்டி மனுவும் வாசுவும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதை இந்த படம் ஆகும்.
வெளியீடு
ஸ்வீட்ஹார்ட் மார்ச் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.