twitter
    Tamil»Movies»Teddy»Story

    டெடி கதை

    டெடி இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா மற்றும் சாயீஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை கே இ ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார்.

    குடும்பங்கள் ரசிக்கும் வகையில்  நகைச்சுவை மற்றும்  திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சிவநந்தீஸ்வரன் எடிட்டிங் செய்துள்ளார்.

    குழந்தைகள் கொண்டாடும் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், 2020ஆம் ஆண்டு வெளியாகவிருந்த நிலையில் சில காரணங்களால் வெளியாகாமல் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ல் பிரபல இணையத்தள ஆன்லைன் ஓடிடி பக்கமான "டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்' செயலியில் வெளியாகியுள்ளது.



    டெடி திரைப்படத்தின் கதை

    கதைக்கரு: சில மருத்துவர்களின் சூழ்ச்சிகளில் சிக்கி கோமா நிலைக்கு செல்லும் நாயகி ஆயிஷா, ஒரு டெடி பியர் பொம்மைக்குள் ஆயிஷாவின் ஆத்மா செல்கிறது. பின் அந்த டெடி பொம்மை ஆர்யாவின் அறிமுகத்துடன், எதிரிகளை பழிவாங்கி தனது உடலுக்குள் மீண்டும் எப்படி சென்றது என்பது தான் படத்தின் கதை.

    சாதாரண குடும்பம் மற்றும் அதிரடி திரைக்கதையை வெவ்வேறு கோணங்களில் உருவாக்கி, தமிழ் திரைப்பட ரசிகர்களை மகிழ்வித்து வந்த தமிழ் சினிமாவை, வேறு பரிமாணங்களில் வெவ்வேறு கோணங்களில் ஹாலிவுட் திரைப்பட கதையினை தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்து தமிழ் திரைப்பட ரசிகர்களை கவர்ந்துள்ளார், இப்படத்தின் இயக்குனர், சக்தி சௌந்தர் ராஜன்.

    கதை:

    ஆர்யா 'ஒ.சி.டி' என்ற ஒரு நோயினால் பாதிக்கப்பட்ட இளைஞர். இவர் எந்த செயல்களையும் முழுவதுமாக கற்றுக்கொள்ளும் திறன் பெற்றவர். ஒரு விபத்தில் சிக்கும் நாயகி ஸ்ரீ (சாயீஷா) மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு சாயீஷாயை கண்காணித்த சில மருத்துவர்கள் ஒரு ஊசியை அளித்து அவரை மயக்கமடைய செய்கிறார்கள்.

    மயக்கத்தில் கோமா நிலைக்கு தள்ளப்பட்டு அவரின் உடல் உறுப்புகளை திருடுவதே இந்த மருத்துவ கும்பலின் நோக்கம். கோமாவில் இருக்கும் சாயீஷாவின் ஆத்மா ஒரு டெடி பியர் பொம்மைக்குள் சில்கிறது. எதிர்பாராமல் ஆர்யாவை சந்திக்கும் அந்த டெடி பொம்மை, ஆர்யாவின் உதவியோடு தனது உடலை கண்டுபிடித்து தனது உடலுக்குள் மீண்டும் செல்ல போராடுகிறது.

    இதற்கிடையில் அந்த மருத்துவ கும்பல், சாயீஷா உடலை வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல, ஆர்யா மற்றும் சாயீஷா வெளிநாட்டிற்கு சென்று வில்லனையும், அந்த கும்பலையும் எதிர்த்து போராடி வெல்வதே படத்தின் கதை.



    **Note:Hey! Would you like to share the story of the movie டெடி with us? Please send it to us ([email protected]).
    Go to : Teddy Photos