தண்டகாரண்யம் - அதியன் ஆதிரை இயக்கி, திரைக்கதை எழுதியுள்ள இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கலையரசன் மற்றும் தினேஷ் ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரித்விகா, பால சரவணன், முத்துகுமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தை வலுவான மற்றும் கருத்து மிக்க படைப்புகளை வழங்கும் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா ஆர்.கே. எடிட்டிங்கை கவனித்து, காட்சிப்பதிவு சிறப்பாக அமையச் செய்துள்ளார்.
கதை
தமிழ்நாடு–கர்நாடகா எல்லைப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் கிராமங்களை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. முருகன் என்ற இளைஞன் வனத்துறையில் வேலையை இழந்ததால், யூனிஃபார்மில் சேவை செய்வதற்கான ஆசையால் இந்திய இராணுவத்தில் சேர்கிறார். ஆனால் சேர்ந்த பின், இராணுவ வாழ்க்கை அவர் கனவு கண்டதைப் போல இல்லையென்று புரிந்துகொள்கிறார்.
வெளியீட்டு தேதி
தண்டகாரண்யம் 19 செப்டம்பர் 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.