தி லயன் கிங் இயக்குனர் ஜான் ஃபேவ்றேவூ இயக்கத்தில் டொனால்ட் க்ளோவ்ர், செத் ரோஜென் நடித்துள்ள செயற்கையான தோற்றங்களை, அறிவியல் தத்ரூபங்கள் கொண்டு உருவான பிரமாண்ட திரைப்படம்.
படக்குழு மற்றும் படத்தின் தகவல்கள்
இத்திரைப்படத்திற்கு தயாரிப்பாளராக இப்படத்தின் இயக்குனர் ஜான் ஃபேவ்றேவூ தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் காலேப் டெஸ்ச்சினேல் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் மார்க் லிவோல்ஸி எடிட்டிங் பணியில், இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி பிக்சார்ஸ் மற்றும் ஃபிய்ர் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தினை வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மற்றும் மோஷன் பிக்சார்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை விநியோகம் செய்துள்ளது.
குழந்தைகளின் பிரபல கார்ட்டூன் திரைப்படங்களும் ஒன்றான தி ஜங்கிள் புக் கார்ட்டூன் கதையினை தற்போது உள்ள நவீன தொழில்நுட்பம் கொண்டு இயக்கி வெற்றிபெற்ற இயக்குனர் ஜான் ஃபேவ்றேவூ, இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் பிரபல கார்ட்டூன் திரைப்படமான தி லயன் கிங் திரைப்படத்தினையும் இயக்கி, தயாரித்துள்ளார்.
தி லயன் கிங்
1994-ஆம் ஆண்டு கார்ட்டூன் திரைப்படமாக வெளிவந்து பிரபலமான திரைப்படமாகும். கார்ட்டூன் கதாபாத்திரங்களாக அறிமுகமான இப்படத்தின் கதாபாத்திரங்கள் உலகளவில் பிரபலமாகின.
வீடியோ கேம்ஸ், புகைப்படம் என பிரபலமான இப்படத்தினை தொடர்ந்து கார்ட்டூன் விடீயோக்களாக பல தொடர்கள் ஒளிபரப்பாகின. இத்திரைப்படம் கார்ட்டூன் படமாக வெளியாகியபோதிலும் பல விருதுகளை உலகளவில் வென்றுள்ளது.
பிரபல கார்ட்டூன் படங்களை தாற்போது உள்ள நவீன தொழில்நுட்பம் கொண்டு கற்பனை மற்றும் செயற்கை வடிவிலான தோற்றங்களை கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் மற்றும் வி.ஃப்.எக்ஸ் தொழில்நுட்பம் கொண்டு மீண்டும் திரையில் வெளியாகின்றன.
கதை
ஒரு காட்டில் அரசனாக உள்ள முஃஅச என்ற சிங்கத்திற்கு சிம்பா என்ற ஒரு ஆண் சிங்கம் பிறக்கிறது. அதே குடும்பத்தில் அரசனை கொன்று அரியணையில் அமர வேண்டும் என ஆசை படும், முஃஅச சிங்கத்தின் சகோதரன் ஸ்கேர்.
சிம்பா தன் தந்தையுடன் விளையாடி கொண்டிருக்கும் தருணத்தில் ஒரு சூழ்ச்சி நடக்கிறது. அதில் முஃஅச மற்றும் சிம்பா ஆகியோரை கொல்ல சதி நடக்கிறது. அதில் முஃஅச இறந்துவிட, சிம்பா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி டிமோன் அண்ட் பூம்பா என்ற காட்டு பன்றி மாற்று காட்டு பூனையுடன் தலைமறைவாக வாழ்ந்து வருகிறது.
பல வருடங்கள் கழித்து எதிர்பாராமல் நலா என்ற சிம்பாவின் தோழி சிங்கம் டிமோன் மற்றும் பூம்பா-வை வேட்டையாடும் தருவாயில், சிம்பா தன் நண்பர்களை காப்பாற்றுகிறது.
சிம்பா உயிருடன் இருப்பதை அறிந்த நலா சிம்பாவை அரியணையில் அமர்த்துவதற்கு அரண்மனைக்கு அழைத்து செல்கிறது. அங்கு தன் தந்தையை கொன்று தாயை சிறைப்பிடித்து வைத்து அரசனாக அநியாயம் செய்து வரும் ஸ்கேர் என்ற தன் சித்தப்பாவை எதிர்த்து போராடி மீண்டும் அரியணையில் அமர்வதே இப்படம்.
தமிழில் டப்பிங்
இத்திரைப்படமானது உலகம் முழுவதும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்தியாவில் மட்டும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் , தமிழ் என பல மொழிகளில் இப்படத்திற்கு அந்தந்த மொழிகளில் உள்ள பிரபலங்களால் டப்பிங் பணி செய்யப்பட்டுள்ளது. தமிழில் சித்தார்த் (சிம்பா), அரவிந்த் சாமி (ஸ்கேர்), ஐஸ்வர்யா ராஜேஷ் (நலா ), மனோபாலா (சாஸு), சிங்கம் புலி (டிமோன்), ரோபோ சங்கர் (பூம்பா) ஆகியோர் இப்படத்திற்கு டப்பிங் பணியாற்றியுள்ளனர்.