தி வாரியர் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொதினி, ஆதி, க்ரித்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா என தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிக்க, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
அதிரடி - திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் நவீன் நூலி எடிட்டிங் செய்துள்ளார். தி வாரியர் திரைப்படம் தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி நேரடியாக 2022 ஜூலை 14ல் திரையரங்குகளில் வெளியாகிறது.
அஞ்சான், சண்டைக்கோழி 2 படங்களின் தோல்விக்கு பிறகு இயக்குனர் லிங்குசாமி இயக்கும் திரைப்படம். இப்படத்திற்கு திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இத்திரைப்படத்தின் தமிழ் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடந்துள்ளது.
தி வாரியர் படத்தின் கதை
கதைக்கரு
சாதுவான மருத்துவராக இருக்கும் ராம் பொத்தினேனி மதுரை தாதா ஆதியை போலீசாக மாறி எப்படி பந்தாடுகிறார் என்பது தான் தி வாரியர் படத்தின் ஒன் லைன்.
கதை
சென்னையில் இருந்து மதுரைக்கு மருத்துவராக செல்லும் ராம் பொத்தினேனி மதுரையையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கில்லி முத்துப்பாண்டி போன்ற ஆதியிடம் சிக்கி அடிவாங்க, அதன் பின்னர், போலீஸ் ஆனால் தான் பவர் கிடைக்கும் என நினைத்து போலீசாக மாறி அதே ஊருக்கு மீண்டும் வந்து ஆதியை துவம்சம் செய்வதே தி வாரியர் படத்தின் கதை.