தீராக் காதல் - இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா என பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது 'லைக்கா புரொடக்ஷன்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார்.
தீராக் காதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2023, மார்ச் 24ல் இணையதள பக்கத்தில் படக்குழு சார்பில் வெளியானது.
காதல் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரசன்னா எடிட்டிங் செய்துள்ளார்.
தீராக் காதல் படத்திற்கு தமிழக தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2023 மே, 26ல் உலகமுழுவதும் வெளியாகியுள்ளது.