தெறி தமிழ் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு மற்றும் மகேந்திரன் நடித்துள்ளனர். இப்படத்தை கலைபுலி எஸ் தாணு இயக்க, ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
கதை :
தெறி கதையை பேபி நைனிகா விஜயை அறிமுகப்படுத்தி துவக்கி வைக்கிறார். விஜய் கேரளாவில் ஒரு பேக்கரி நடத்தி வருகிறார். எமி ஜாக்சன் நைனிக்காவின் டீச்சராக வருகிறார். ஒரு கட்டத்தில், விஜயை தாக்க, அடியாட்கள் வருகின்றனர். அவர்களுடன், விஜய் சண்டையிடுகிறார், அதன் பின்னர், பிளாஷ் பேக் தொடங்குகின்றது.
ஜோசப்-ஆக வந்த விஜய் விஜயகுமராக வருகிறார். அவரது தாயார் ராதிகா, விஜய்க்கு பெண் பார்க்க, அந்த பெண் இவரை நிராகரிக்கின்றார். அதேசமயம், சமந்தா ஒரு மருத்துவராக வருகிறார், இவ்விருவருக்கும் இடையில், காதல், நகைச்சுவை என கதை நகர்கின்றது.
இதே நேரத்தில், பிரபு, விஜய்க்கு சீனியர் ஆபிசராகவும், மகேந்திரன் வில்லனாகவும் தங்களது என்ட்ரியை குடுக்க, வசனங்கள் தெறிக்க, இடைவேளை..
கதை மறுபடியும் கேரளாவிற்கே திரும்புகின்றது. மறுபடியும் ஒரு பிளாஷ் பேக், என ஒரு பெரிய சண்டை காட்சியுடன் படம் நிறைவடைகிறது.