X
தெறி

தெறி

Action | 14 Apr 2016 | U |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

தெறி கதை

தெறி  தமிழ் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு மற்றும் மகேந்திரன் நடித்துள்ளனர். இப்படத்தை கலைபுலி எஸ் தாணு இயக்க, ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கதை : தெறி கதையை பேபி நைனிகா விஜயை அறிமுகப்படுத்தி துவக்கி வைக்கிறார். விஜய் கேரளாவில் ஒரு பேக்கரி நடத்தி வருகிறார். எமி ஜாக்சன் நைனிக்காவின் டீச்சராக வருகிறார். ஒரு கட்டத்தில், விஜயை தாக்க, அடியாட்கள்  வருகின்றனர். அவர்களுடன், விஜய் சண்டையிடுகிறார், அதன் பின்னர், பிளாஷ் பேக் தொடங்குகின்றது.  ஜோசப்-ஆக வந்த விஜய் விஜயகுமராக வருகிறார். அவரது தாயார் ராதிகா, விஜய்க்கு பெண் பார்க்க, அந்த பெண் இவரை நிராகரிக்கின்றார். அதேசமயம், சமந்தா ஒரு மருத்துவராக வருகிறார், இவ்விருவருக்கும் இடையில், காதல், நகைச்சுவை என கதை நகர்கின்றது.  இதே நேரத்தில், பிரபு, விஜய்க்கு சீனியர் ஆபிசராகவும், மகேந்திரன் வில்லனாகவும் தங்களது என்ட்ரியை குடுக்க, வசனங்கள் தெறிக்க, இடைவேளை..  கதை மறுபடியும் கேரளாவிற்கே திரும்புகின்றது. மறுபடியும் ஒரு பிளாஷ் பேக், என ஒரு பெரிய சண்டை காட்சியுடன் படம் நிறைவடைகிறது. 
Read More

தெறி நடிகர்கள் & படக்குழுவினர்

தெறி அணியின் தகவல்

இயக்குனர் அட்லி குமார்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தெறி விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
'கடமை தவறாத போலீஸ் அதிகாரியின் கதை' - இந்த ஒரு வரியைச் சொன்னதும் 'ஒரு ஊர்ல ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி இருப்பார். அவருக்கு ஒரு அழகான குடும்பம் இருக்கும். இந்த அதிகாரியால் பாதிக்கப்பட்ட ஒரு பலம் மிக்க பெரிய மனிதன் இருப்பான். அந்த பெரிய மனிதன் இந்த அதிகாரியின் குடும்பத்தைச் சின்னாபின்னமாக்குவான். அதற்கு பழிக்குப் பழி தீர்க்க அதிகாரி என்னவெல்லாம் செய்வார்' என்பதெல்லாம் உங்கள் மனக் கண்களில் விரிகிறதா? வெல்... தெறியின் கதையும் அதேதான்! முதல் அரை மணி நேரம் பாட்ஷா, ஒரு கலர்ஃபுல் பாடலுக்கு சிவாஜி, கதையின் அடித்தளமாக சத்ரியன் மற்றும் ரமணா... இப்படி தனக்குப் பிடித்த ஆக்ஷன் த்ரில்லர்களின் 'இன்ஸ்பிரேஷனாக' இந்தத் தெறியை உருவாக்கியுள்ளார் அட்லி. எந்த பந்தாவும் இல்லாத அழகான இயற்கைப் பின்னணியில் அமைந்த அறிமுகக் காட்சி இதம். விஜய்யின் ப்ளாஷ்பேக்கில் வரும் அந்த முதல் ஆக்ஷன் காட்சி அபாரம். சிக்னல்களில் குழந்தைகளைப் பிச்சையெடுக்க வைக்கும் அந்த கேடுகெட்ட ரவுடிகளை துவம்சம் செய்யும் காட்சிகளில் விஜய்க்கு ஆரத்தி எடுக்க வேண்டும். அருமை. குறிப்பாக, வகுப்பறைக்குள் ரவுடிகளுக்குப் பாடம் சொல்லித் தரும் விதம், மாமனாரிடம் பெண் கேட்கும் காட்சி... செம்ம! மொட்டை ராஜேந்திரனுக்கு செம புரமோஷன் இந்தப் படத்தில். படம் முழுக்க விஜய்யுடனே வருகிறார். சமயத்தில் கேரக்டர்... சில காட்சிகளில் நல்ல காமெடியன். விஜய் ரசிகர்களுக்கு பெரிய அலுப்பிருக்காது. பொதுவான பார்வையாளருக்கு அட்லியிடம் நிறைய எதிர்ப்பார்த்துவிட்டோமோ என்ற கேள்வியைத் தவிர்க்க முடியாது.

தெறி செய்திகள்

தெறி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

தெறி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+