X
முகப்பு » பிரபலங்கள் » எமி ஜாக்ஸன்
எமி ஜாக்ஸன்

எமி ஜாக்ஸன்

Actress/Singer
பயோடேட்டா:  ஏமி லூயிசு சாக்சன் (ஏமி ஜாக்சன்) இங்கிலாந்தை சேர்ந்த வடிவழகி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களை வென்ற இவர் மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகினார். ஏமி சாக்சன் இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு அருகில் உள்ள குனவ்சுலி கிராமத்தில் ஜனவரி 31, 1991ல் பிறந்தார். இவரது தந்தை ஆலன் சாக்சன் பிபிசி வானொலியில் பனியாற்றியவர். தாயார் பெயர் மாக்ரிதா சாக்சன். ஏமிக்கு இரண்டு வயதான போது இவர்களது குடும்பம் லிவர்பூல் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்கு உள்ள புனித எட்வர்டு கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். இவர் 2008ம் அண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார். தொடர்ந்து லிவர்பூல் பதின்வயது அழகி 2010 (Miss Teen Liverpool) விருதையும் பெற்றார். இது தவிர உலக அளவில் 18-கும் மேற்பட்ட அழகி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். ஏமி சாக்சன் 2010ல் வெளியான மதராசபட்டணம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் நடிகையாக தனது முதல் முத்திரையை பதித்தார். அதுவே இவரது முதல் திரைப்பட அனுபவம் ஆகும். 1947 ம் ஆண்டு கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்ததைத் தொடர்ந்து பலரது பாராட்டுகளை பெற்றார். எமி தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் நடித்துவருகிறார். மதராசப்பட்டினத்தில் அறிமுகமான இவர் தற்போது தமிழில் விக்ரமுடன் ஐ, தாண்டவம் என்ற திரைப்படங்களிலும் சமீபத்தில் தெறி மற்றும் 2.0 திரைப்படத்தில் நடித்துள்ளார். திருமணம் ஏமி ஜாக்சன் தனது காதலரான ஜார்ஜ் என்பவரை 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்யவுள்ளார். இதற்காக இவர்கள் திருமணத்திற்கு இடம் மற்றும் தேதிகள் எல்லாம் தேர்வுசெய்யப்பட்டு வருகிறது. இவ்ரகள் திருமணம் 2019 மே 5ல் நிச்சயிக்கப்படும் என கூறியுள்ளார் ஏமி. திருமணத்திற்கு பல இடங்களை பார்த்துள்ளார்கள். ஆனால் கடற்கரையோரம் திருமணம் செய்ய வேண்டும் என்று ஏமி விரும்பினாராம். இதையடுத்து தான் கிரீஸை தேர்வு செய்துள்ளார்கள். மைகொனோஸ் தீவுக்கு அருகில் உள்ள வில்லாக்களில் ஒன்றில் அவர்களின் திருமணம் நடக்கக்கூடும். திருமணத்திற்கு பிறகு இங்கிலாந்தில் செட்டில் ஆகிறாராம் ஏமி. புத்தாண்டு அன்று தான் ஏமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு இது குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.
மேலும் படிக்க

எமி ஜாக்ஸன் திரைப்படங்கள்

எமி ஜாக்ஸன்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

எமி ஜாக்ஸன்

பெயர் எமி ஜாக்ஸன்
பிறந்த தேதி 31 Jan 1991
வயது 35
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

எமி ஜாக்ஸன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

எமி ஜாக்ஸன் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+