திட்டம் இரண்டு (PLAN B) இயக்குனர் விக்னேஷ் கார்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன் மற்றும் வினோத் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் சதிஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார்.
திட்டம் இரண்டு படத்தின் கதை
ஆதிரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) திருச்சியில் காவலராக பணியாற்றி வருகிறார். ஆதிராவை திருச்சியில் இருந்து சென்னைக்கு பணியிட மாற்றம் செய்ய, பேருந்தில் சென்னைக்கு வருகிறார், ஆதிரா. அதே பேருந்தில் பயணிக்கும் நாயகன் சுபாஷ் செல்வத்தை கண்ட ஆதிராவுக்கு பார்த்த நொடியில் காதல் மலர்கிறது. பின் எதிர்பாராத நேரத்தில் மற்றொரு இடத்திலும் இவர்களது சந்திப்பு நிகழ்கிறது. அதன்பின் இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர்.
ஆதிரா சென்னைக்கு வந்த ஓரிரு நாளிலே அவரது நெருங்கிய தோழி அனன்யா காணாமல் போகிறார். அனன்யா கார் விபத்தில் இறந்ததாக தகவல்கள் வருகிறது. ஆனால் அனன்யாவின் மரணத்தில் சந்தேகிக்கும் ஆதிரா, தனது தோழியின் வழக்கை விசாரிக்க தொடங்குகிறார்.
அந்த வழக்கில் ஆதிரவுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் ஆதிராவின் தோழி கொலை வழக்கு மற்றும் ஆதிராவின் காதல் என இரண்டும் ஒரே புள்ளியில் இணைகிறது. உண்மையில் அந்த கொலை செய்தது யார்? என்பதே படத்தின் கதை.
திட்டம் இரண்டு - ரிலீஸ்
இப்படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் ஒரு முழுநேர நாயகிக்கான முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகிறார். இந்த படம் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோன இரண்டாம் அலை காணரமாக ஓடிடியில் வெளியானது.
2021 ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் நாளில் திட்டம் இரண்டு சோனி லைவ் ஓடிடியில் வெளியானது.