உன் சமையலறையில் என்ற திரைப்படம் 2014 ஜூன் மாதம் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படத்தை அவரே இயக்கியிருப்பதுடன், நடித்தும் இருக்கின்றார். இந்த திரைப்படம் ஆஷிக் அபு இயக்கத்தில், 2011ம் ஆண்டு சால்ட் அன்ட் பெப்பர் என்ற பெயரில் வெளிவந்த மலையாள திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். உன் சமையலறையில் படமானது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ்ராஜுக்குச் சோடியாக முதன்முதலாக நடிகை சினேகா நடித்துள்ளார்.
கதை
உன் சமயலறையில் இக்கதை நீண்ட நாள் ஆகியும் திருமணம் ஆகாத இரண்டு பேர் தவறான தொலைபேசி இணைப்பின் மூலம் இணைகின்றனர். தொலைபேசியில் பேசும் இருவர் நேரில் சந்திக்க தயங்குகின்றனர். அதனால், இருவரும் அவர்களின் காதலை தவிர்க்கின்றனர். இறுதியில் அவ்விருவர் சந்தித்தனரா? அவர்களின் காதல் நிறைவேறியதா? என்பதை ருசிகரமான கட்சியாக கதையை நகர்த்தியிருக்கிறார்.இயக்குனர் பிரகாஷ் ராஜ்.