உயர்ந்த மனிதன் கதை

    உயர்ந்த மனிதன் இயக்குனர் தமிழ்வண்ணன் இயக்கத்தில், அமிதாப் பச்சன், எஸ் ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளிவருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 2018 மார்ச்சில் தொடங்குகிறது. திருச்செந்தூர் முருகன் புரடக்‌ஷன்ஸ் என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் five element pictures இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறது. 

    சிவாஜி கணேசன் நடித்த உயர்ந்த மனிதன் என்ற படத்தின் பெயரை தான் இப்படத்திற்கு வைத்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்திற்கு வில்லனாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாக தகல்வல்கள் வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தின் இயக்குனரான தமிழ்வண்ணன் இதற்கு முன்னதாகவே எஸ் ஜே சூர்யா நடித்த "கள்வனின் காதலி" திரைப்படத்தினை இயக்கி எஸ் ஜே சூர்யாவுடன் பணியாற்றியுள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie உயர்ந்த மனிதன் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).